பிரபல வீரர்கள் பங்கேற்கும் டி10 தொடர் அடுத்த வாரம் ஆரம்பம்

236
T10 League

கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இத்தருணத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் கீழ் இயங்கும் ஒரு நாடான செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸில் “தி வின்சி ப்ரீமியர் லீக்” டி10 கிரிக்கெட் தொடர் (THE VINCY PREMIER T10 LEAGUE) அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளது.  

இதன்படி, மார்ச் மாதத்திற்குப் பிறகு பிரபல வீரர்கள் பங்கேற்கும் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடராக இது அமையவுள்ளது

>> கெயிலைத் தொடர்ந்து ஜமைக்கா அணியை வெறுக்கும் அன்ட்ரூ ரஸல்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் இறுதியில் இருந்து கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது மற்ற தொடர்கள் நடக்கும் திகதிகளை அந்தந்த நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் சபைகள் அறிவிக்க முடியாத நிலையில் உள்ளன.  

இந்நிலையில், இம்மாதம் 22ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை மேற்கிந்தியத் தீவுகளின் ஒரு நாடான செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸில் இந்த “தி வின்சி ப்ரீமியர் லீக்” என்ற பெயரில் டி10 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெறும் என அதன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது

எனவே, கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவும் இத்தருணத்தில் பிரபல வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவுள்ளமை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது

குறிப்பாக, கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க எச்சில், வியர்வையைக் கொண்டு பந்துகளைப் பளபளப்பாக்கத் தடை விதிப்பது குறித்து ஐசிசி விவாதித்து வருகிறது. இந்நிலையில் வி.பி.எல் டி10 போட்டியில் பந்தில் பளபளப்பை ஏற்படுத்துவதற்காக எச்சிலைப் பயன்படுத்த தற்போது முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது

இதனிடையே, இந்த வருடம் முதல் அறிமுகமாகும் வி.பி.எல் டி10 தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், இதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்களான கெஸ்ரிக் வில்லியம்ஸ், சுனில் அம்ப்ரிஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்

அத்துடன், வீரர்களும் பார்வையாளர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவார்கள் எனவும், பாதுகாப்பு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, அங்குரார்ப்பண வி.பி.எல் டி10 லீக் தொடரில் மொத்தமாக 30 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், தினமும் 3 போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அத்துடன், போட்டிகள் அனைத்தும் இந்திய மற்றும் இலங்கை நேரப்படி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கும் போட்டி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>> மூன்று மாதங்கள் சம்பளம் இல்லாமல் விளையாடிய மே. தீவுகள் வீரர்கள்

இதுதொடர்பில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் உப தலைவரும், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸ் கிரிக்கெட் சபையின் தவைருமான கிஷோரி ஷலாவே கருத்து வெளியிடுகையில்,  

“நாங்கள் அரசாங்கம் மற்றும் சுகாதார தரப்பின் அறிவுரைகளை பின்பற்றி இந்தத் தொடரை வெற்றிகரமாக நடத்தவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அத்துடன், போட்டி நடைபெறுகின்ற போது வீரர்களுக்கு செனிடைஸர் பயன்படுத்த முடியும். அத்துடன் பந்தை பளபளக்கச் செய்வதற்கு வியர்வையை பன்படுத்த முடியாது

பயிற்சிகளின் போதும், வெற்றியைக் கெண்டாடும் போதும் வீரர்கள் கட்டாயம் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்

இதேவேளை, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸில் கெரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 10 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள். இதனால், அந்த நாட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் வி.பி.எல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாத இறுதியில் தெற்கு பசிபிக் கடலில் உள்ள குட்டித்தீவான வனாட்டுவில் டி10 கிரிக்கெட் போட்டித் தொடரொன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற இவ்வருடத்துக்கான டி10 லீக் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

வி.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள அணிகள் விபரம்

  • பொட்டெனிக் கார்ட்ன்ஸ் ரேன்ஜர்ஸ்கெஸ்ரிக் வில்லியம்ஸ் (பிரதான வீரர்), நிக்சன் மெக்லியன் (பயிற்சியாளர்)
  • க்ரெனடின்ஸ் டைவர்ஸ்ஒபெட் மெக்கோய் (பிரதான வீரர்), இயென் அலென் (பயிற்சியாளர்)
  • சோல்ட் பொண்ட் பேகர்ஸ்சுனில் அம்ரிஸ் (பிரதான வீரர்), ஒலன்சோ ஜெக்சன் வொரிகன் (பயிற்சியாளர்)
  • லோசிபியா ஹய்கர்ஸ்டெஸ்ரோன் மெலோனி (பிரதான வீரர்), எர்வின் வொரிகன் (பயிற்சியாளர்)
  • டார்க் விவ் எக்ஸ்ப்லோர்ஸ்லின்டன் ஜேம்ஸ் (பிரதான வீரர்), பெர்டிரம் ஸ்டெப்லெடன் (பயிற்சியாளர்)
  • போர்ட் சாலட் ஸ்டைகர்ஸ்கொரோன் கோடோய் (பிரதான வீரர்), கென்ரோய் மார்டின் (பயிற்சியாளர்)

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<