இந்திய ஏ அணியில் இடம்பிடித்த 2 தமிழக வீரர்கள்

447
Bangladesh India Cricket
©Cricfit.com

தென்னாபிரிக்க ஏ அணியானது இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இந்திய ஏ அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், நான்கு நாட்கள் கொண்ட இரண்டு உத்தியோகபூர்வற்ற டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.  

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த திமுத்!

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் …………

இந்திய அணியானது குறித்த இரு தொடர்களுக்குமான குழாம்களில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான குழாமை நேற்று (19) வெளியிட்டிருந்தது. குறித்த ஒருநாள் தொடருக்கான குழாமானது இரு குழாம்களாக பிரிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான குழாம் 

குறித்த மூன்று போட்டிகளுக்குமான குழாமில் 15 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். அதன்படி இந்திய அணியின் தலைவராக இந்திய அணிக்காக 54 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள 29 வயதுடைய துடுப்பாட்ட வீரரான மணீஸ் பாண்டி பெயரிடப்பட்டுள்ளார்

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் அண்மையில் நிறைவுக்கு வந்த தொடரில் இந்திய அணியானது டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரு தொடர்களையும் வென்றிருந்தது. அதன் பிரகாரம் மீண்டும் இந்திய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கும் வகையில் சுப்மன் கில் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்

சன்ரைஸஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக ப்ரெட் ஹெடின் நியமனம்

கிரிக்கெட் உலகில் நடைபெறும் பிரபல்யமான ………..

இந்திய அணியின் வீரரான நவ்தீப் சைனி தற்போது மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளதன் காரணமாக அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். மேலும், மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் களமிறங்கிய அவேஸ் கான் தென்னாபிரிக்கா அணியுடன் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்

இதேவேளை, இவ்வருட ஆரம்பத்தில் இந்திய அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் விளையாடிய, இந்திய தேசிய அணியிலும் மூவகையான போட்டிகளிலும் விளையாடியுள்ள வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாகுர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்

அதேபோன்று, இந்திய அணியின் நம்பிக்கை சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவரான யுஷ்வேந்திர சஹால் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் குழாமில் இடம்பெறாததன் காரணமாக நீண்ட கால இடைவெளியின் பின்னர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இதில் முதல் 3 போட்டிகளுக்குமான குழாமிலேயே அவர் பெயரிடப்பட்டுள்ளார்

அண்மையில் நிறைவுக்குவந்த உலகக் கிண்ண தொடரின் போது உபாதை காரணமாக இடைநடுவில் குழாமிலிருந்து வெளியேறிய தமிழகத்தை சேர்ந்த சகலதுறை வீரர் விஜய் சங்கர் மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் ஒருநாள் குழாமில் அவர் இடம்பெற்றுள்ளார்

ஒரு வருட தடைக்குள்ளான மொஹமட் ஷெஹ்சாத்

அண்மையில் நிறைவுக்கு வந்த உலகக்கிண்ண ……..

அண்மையில் இலங்கை அணியுடனான தொடரில் விளையாடிய 26 வயதுடைய சகலதுறை வீரர் சிவம் துபே மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் மாத்திரம் விளையாடியதன் பின்னர் தற்போது மீண்டும் இந்திய அணியின் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளார்

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்குமான குழாம்.

மணீஸ் பாண்டி (அணித்தலைவர்), ருத்ராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், அன்மொல்பிரீட் சிங், ரிக்கி புயி, இஷான் கிஷான், விஜய் சங்கர், சிவம் துபே, குர்னால் பாண்டியா, அக்ஷார் படேல், யுவ்வேந்திர சஹால், சர்துல் தாகுர், தீபக் சஹார், கலீல் அஹமட், நித்திஸ் ரானா

இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான குழாம் 

முதல் மூன்று போட்டிகளுக்குமான குழாமில் இடம்பெறாத, இந்திய அணிக்காக மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் அசத்திவரும் இளம் துடுப்பாட்ட வீரர் சிரேயஸ் ஐயர் இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்குமான இந்திய அணியின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.  

முதல் குழாமில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பெயரிடப்பட்டுள்ள ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக இரண்டாவது குழாமில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இலங்கை அணியுடனான தொடரில் களமிறங்கிய பிரசாந்த் சோப்ரா பெயரிடப்பட்டுள்ளார்

காலி ஆடுகளம் பற்றி அதிர்ச்சியை வெளியிடும் கேன் வில்லியம்சன்

காலி சர்வதேச அரங்கில் இதற்கு முன்னர் நான்காவது ………..

மேலும், முதல் குழாமில் விக்கெட் காப்பாளராக பெயரிடப்பட்டுள்ள இஷான் கிஷானுக்கு பதிலாக இரண்டாவது குழாமில் விக்கெட் காப்பாளராக இந்திய அணிக்காக கன்னி டி20 போட்டியில் விளையாடியுள்ள சஞ்சு சம்சன் பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன் யுஸ்வேந்திர சஹாலுக்கு பதிலாக தமிழக வீரர் வொசிங்டன் சுந்தர் பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும், முதல் குழாமில் இடம்பெற்றுள்ள தீபக் சஹார், கலீல் அஹமட் மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோருக்கு பதிலாக ராகுல் சஹார், துசார் தேஷ்பான்டி மற்றும் இஷான் பெரெல் ஆகியோர் இறுதி இரண்டு போட்டிகளுக்குமான குழாமில் இடம்பெற்றுள்ளனர்

இறுதி இரண்டு போட்டிகளுக்குமான குழாம்

சிரேயஸ் ஐயர் (அணித்தலைவர்), சுப்மன் கில், பிரசாந்த் சோப்ரா, அன்மொல்பிரீட் சிங், ரிக்கி புயி, சஞ்சு சம்சன், நித்திஸ் ரானா, விஜய் சங்கர், சிவம் துபே, வெசிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ராகுல் சஹார், சர்துல் தாகுர், துசார் தேஷ்பான்டி, இஷான் பெரெல்

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியானது இம்மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஒருநாள் தொடரை தொடர்ந்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியானது அடுத்த மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<