இலங்கையின் மிகப் பெரிய மைதான நிர்மாணத்தை இடைநிறுத்தி, அந்த நிதியை பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்திக்கு பயன்படுத்துமாறும், குறிப்பாக யுத்ததத்துக்குப் பிறகு அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாடசாலை கிரிக்கெட் தொடர்பில் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளுமாறும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷடவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்தார். எனவே, குறித்த சந்திப்பில் மஹேல ஜயவர்தன முன்வைத்த கருத்தினை இந்தக் காணொளியில் காணலாம்.