ஐ.சி.சி இன் தலைவர் பதவிக்கான தேர்தலில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் கொலின் கிரேவ்ஸ், இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஈசான் மணி மற்றும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக செயற்பட்டு வரும் குமார் சங்கக்கார உள்ளிட்ட நால்வரும் போட்டியிடவுள்ளதாக செய்திகள் பரவலாக வெளிவந்த வண்ணம் உள்ளன. எனினும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், சவுரவ் கங்குலி போட்டியின்றி தவைராக தேர்வு செய்யப்படலாம் எனவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.