ஆண்களுக்கான 200 மீற்றரில் தேசிய கனிஷ்ட சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்றவரும், அண்மைக்காலமாக தேசிய மட்டத்தில் பல வெற்றிகளையீட்டி வருகின்ற குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீரரான மொஹமட் சபான், இம்முறை நேபாளத்தில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளார். மொஹமட் சபானின் வெற்றிப் பயணம் குறித்த காணொளியை இங்கு பார்க்கலாம்.