கழுத்தில் பந்து தாக்கி ஷூவோ வைத்தியசாலையில்

968
Suhrawadi Shuvo
Photo - BCB

பங்களாதேஷ்  ‘ஏ’ பிரிவு அணிகளுக்குகிடையிலான டாக்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று விக்டோரியா ஸ்போர்ட்டிங் கிளப் சார்பில் சகலதுறை வீரர் சுரவாடி ஷூவோ துடுப்பெடுத்து ஆடிக்  கொண்டிருந்தார். அப்போது பவுன்சராக வந்த பந்து ஒன்று அவரது கழுத்தைப் பதம் பார்த்தது. அப்போது அவர் கிரிக்கட்டில் புதிதாக அறிமுகமான பாதுகாப்பான  ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் அவர் அபாய கட்டத்தில் இருந்து மீண்டுவிட்டார்.

சுரவாடி ஷூவோ காயம் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பிசியோதெரபி டாக்டர் டெபாஷிஷ் சவுத்ரி கூறுகையி்ல ‘‘தற்போது சுரவாடி ஷூவோ நிலைமை சரியாகிவிட்டது. இருந்தாலும் தீவிர கண்காணிப்பில்தான் இருக்கிறார். அவரது தலையில் ஏதும் அடி பட்டிருகிறதா என்பதைப் பார்க்க, 24 மணி நேரம் அவரை நாங்கள் கண்காணிக்க இருக்கிறோம்.

புதிய விதிமுறைப்படி ஹெல்மெட் அணிந்து விளையாடியிருந்தால் அவருக்கு பாதுகாப்பாக இருந்திருக்கும். அவருக்கு நான்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. இதில் மூன்றில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கண் குறித்த பரிசோதனையில் மட்டும் கவலையளிக்கும் வகையில் உள்ளது”  என்றார்.

27 வயதான சுரவாடி ஷூவோ பங்களாதேஷ் அணிக்காக 17 ஒருநாள் சர்வேதேசப்  போட்டிகளில் 98 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு 14 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்