இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவியாக மீண்டும் விக்டோரியா லக்ஷ்மி

288

இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவியாக மீண்டும் விக்டோரியா லக்ஷ்மி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் ஒரு வருட காலத்துக்கு இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவியாக அவர் செயற்படவுள்ளார்.

இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று (31) விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது

>>இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முதலாவது தலைவி மரணம்<<

இதில் 22 சங்கங்களினால் விக்டோரியா லக்ஷ்மியின் பெயர் மீண்டும் தலைவியாக முன்மொழியப்பட்ட நிலையில், அவர் தலைமையிலான முன்னாள் நிர்வாகிகள் குழு இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் அனைத்து பதவிகளையும் மீண்டும் கைப்பற்றியுள்ளது. 

இந்த நிலையில், இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவியாக மீண்டும் தெரிவாகியமை தொடர்பில் விக்டோரியா லக்ஷ்மி கருத்து தெரிவிக்கையில்

”உண்மையில் இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவியாக போட்டியின்றி தெரிவாகியமை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, வாக்கெடுப்பை நடாத்தமால் இம்முறை நிர்வாகிகள் தேர்வு இடம்பெற்றமை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது

அத்துடன், என்னை மீண்டும் தலைவியாக தேர்வு செய்வதற்கு 22 சங்கங்கள் ஆதரவு <<வழங்கியிருந்தமை பெருமையாக உள்ளது

கொவிட் – 19 வைரஸுக்கு மத்தியில் நாங்கள் நீண்ட பயணம் செல்ல வேண்டியுள்ளது. அந்த சவாலை ஏற்றுக்கொள்ள நான் தயாராக உள்ளேன். எனினும், எதிர்காலத்தில் இளம் வீராங்கனைகளை தேசிய வலைப்பந்தாட்ட அணிக்குள் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். 

>>இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் புதிய பயிற்சியாளராக சொமித்தா<<

அடுத்த வருடம் இலங்கையில் சர்வதேச நாடுகள் கலந்துகொள்ளும் வலைப்பந்தாட்ட தொடர் ஒன்றை நடத்துவதற்கும், 2022இல் ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரை இலங்கையில் நடத்துவதற்குமான அனுமதியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்

அத்துடன், வலைப்பந்தாட்ட சங்கத்தின் யாப்பை திருத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். மறுபுறத்தில் இந்நாட்டின் வலைப்பந்தாட்ட விளையாட்டின் முன்னேற்றத்துக்கான உழைக்கின்ற அனைவரையும் ஒன்றுதிரட்டி, அவர்களது பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்” என அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளராக சம்பா குணவர்தனவும், பொருளாளராக பத்மினி ஹொரணகேவும், உப தலைவியாக டி.எம் குமாரிஹாமியும், உப செயலாளராக சுமித்ரா வனசிங்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<