அரையிறுதிக்கு முன்னேறியுள்ள கொழும்பு மற்றும் ரெட் ஸ்டார்ஸ்

476

சுகததாச அரங்கில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ரெட் ஸ்டார் கால்பந்து கழகம் என்பன தொடரின் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளன.  

குறித்த போட்டிகளின் முடிவுகள் 

கொழும்பு கா.க எதிர் இலங்கை பொலிஸ் வி.க 

பலம் கொண்ட இரு அணிகள் மோதிய இந்தப் போட்டியின் முதல் பாதி முழுவதும் கொழும்பு கால்பந்து கழக அணி வீரர்கள் ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 

வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண அரையிறுதியில் ஜாவா லேன், நியூ ஸ்டார் அணிகள்

எனினும், ஆகிப் தனக்கு கிடைத்த பந்தை கோல் நோக்கி எடுத்த முயற்சியின்போது அது கம்பங்களை விட்டு வெளியே சென்றது. மீண்டும் சர்வான் கோல் எல்லையில் இருந்து வழங்கிய பந்தை ஆகிப் கோலுக்குள் செலுத்தியபோதும் அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது. 

முதல் பாதியில் பொலிஸ் அணியின் கோல் காப்பாளர் தினேஷ் உபாதைக்கு உள்ளாகி மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு மாற்று கோல் காப்பாளர் களத்திற்குள் நுழைந்தமை அவ்வணிக்கு பெரிதும் பாதிப்பாக அமைந்தது.  

முதல் பாதி கோல் இன்றி நிறைவுபெற, இரண்டாம் பாதியிலும் அதே ஆட்டத்தை காண்பித்த கொழும்பு அணிக்கு சபீர் ரசூனியா உள்ளனுப்பிய பந்தை கோளுக்கு அண்மையில் இருந்த பசால் ஹெடர் மூலம் கோலாக்கினார்.  

Video – தமது முன்னாள் வீரராலேயே தோற்ற PSG !| FOOTBALL ULLAGAM

மீண்டும் 80 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய காலத்தில் இருந்து சபீர் வழங்கிய பந்தை சஸ்னி கோலாக்கினார். கோலுக்கான இரண்டு உதவிகளை வழங்கிய  சபீர் போட்டியின் 93ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலைப் பெற, ஆட்டம் முடிவில் கொழும்பு கால்பந்து அணி 3 – 0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு தெரிவாகியது. 

முழு நேரம்: கொழும்பு கா.க 3(0) – 0(0) பொலிஸ் வி.க 

கோல் பெற்றவர்கள் 

  • கொழும்பு கா.க –   மொஹமட் பசால் 59’, அஹமட் சஸ்னி 81’, சபீர் ரசூனியா 90+3’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

  • கொழும்பு கா.க –  மொஹமட் ஆகிப் 28’, மொமாஸ் யாபோ  75’, நிரான் கனிஷ்க 79’
  • பொலிஸ் வி.க – DLK லன்கேஷ்வர 68’ 

செரண்டிப் கா.க எதிர் ரெட் ஸ்டார்ஸ் கா.க  

அதே தினம் இரவு இடம்பெற்ற இந்த மோதல் ஆரம்பமாகிய முதல் நிமிடம் முதல் மைதானத்தில் இரு அணி வீரர்களினதும் ஆக்ரோசம் நீடித்தது. போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களில் ரெட் ஸ்டார் அணிக்கு கிடைத்த பெனால்டியை இஸ்மயில் அபுமெரி வெளியே அடித்தார். 

அதற்குப் பதிலாக அவர் 11ஆவது நிமிடத்தில் போட்டியின் முதல் கோலை அடித்தார். எனினும், அடுத்த இரண்டு நிமிடங்களில் ரியாஸ் மொஹமட் செரண்டிப் அணிக்கான முதல் கோலைப் பெற்று ஆட்டத்தை சமப்படுத்தினார். 

அந்த சமநிலை ஒரு நிமிடத்திற்கே இருந்தது. ரெட் ஸ்டார்ஸ் வீரர் டிலக்ஷன் அடுத்த கோலைப் போட்டு மீண்டும் அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார். அதன் பின்னர் அபுமெரி இரண்டு கோல்களைப் பெற்று தனது ஹெட்ரிக்கை பதிவு செய்ய, செரண்டிப் அணியால் முதல் பாதி நிறைவின்போது மேலும் ஒரு கோலினை மட்டுமே பெற முடிந்தது. 

FFSL தலைவர் கிண்ணத்தில் கொவிட்-19 விதி மீறல்கள்

இரண்டாம் பாதி ஆரம்பமாகும்போது 4 – 2 என முன்னிலையில் இருந்து ரெட் ஸ்டார்ஸ் அணிக்கு ரஹ்மான் ஒரு கோலைப் பெற, இரண்டாம் பாதியில் அமித் குமார மூலம் செரண்டிப் அணிக்கும் ஒரு கோல் கிடைத்தது. 

போட்டி நிறைவில் 5 – 3 என இரண்டு  மேலதிக கோல்களினால் வெற்றி பெற்ற ரெட் ஸ்டார்ஸ் அணி வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண தொடரில் கடைசி அணியாக அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.  

முழு நேரம்: செரண்டிப் கா.க 3(2) – 5(4) ரெட் ஸ்டார்ஸ் கா.க   

 கோல் பெற்றவர்கள்  

  • செரண்டிப் கா.க  –    ரியாஸ் மொஹமட் 13’, மொஹமட் சிபான் 40’, அமித் குமார 76’
  • ரெட் ஸ்டார்ஸ் கா.க –   இஸ்மயில் அபுமெரி 11’, 33’ & 43, அன்ட்ரு டிலக்ஷன் 14’, மொஹமட் ரஹ்மான் 78’ 

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்  

  • செரண்டிப் கா.க –   ரியாஸ் அஹமட் 71’
  • ரெட் ஸ்டார்ஸ் கா.க – மொஹமட் அஜ்மல் 17’, ஜானக சமிந்த 24’, அன்ட்ரு டிலக்ஷன் 76’ 

இந்த தொடரின் காலிறுதிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் அரையிறுதிக்கு ஜாவா லேன், நியூ ஸ்டார், கொழும்பு மற்றும் ரெட் ஸ்டார்ஸ் அணிகள் தெரிவாகியுள்ள. 

அரையிறுதியில் விளையாடும் அணிகள் குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்படும். 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<