UEFA சிறந்த வீரர் விருதை வென்றார் டிஜ்க்

243

நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பின்தள்ளி 2019 ஆம் ஆண்டுக்கான UEFA சிறந்த வீரர் விருதை லிவர்பூல் அணியின் மத்திய பின்கள வீரர் விர்ஜில் வான் டிஜ்க் தட்டிச்சென்றார். இதன் மகளிர் விருதை லூசி பிரோன்ஸ் வென்றார். 

லிவர்பூல் அணி மெட்ரிட்டில் நடந்த டொட்டஹாமுக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 2-0 என வெற்றி பெற்று தமது ஆறாவது ஐரோப்பிய கிண்ணத்தை கடந்த பருவத்தில் கைப்பற்றியதில் நெதர்லாந்தின் வான் டிஜ்க் முக்கிய பங்கு வகித்தார்.  

கிரிஸ்மனின் இரட்டை கோல்களால் மெஸ்ஸி இன்றி பார்சிலோனா வெற்றி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா ……

“எனது சக அணி வீரர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் இன்றில் என்னால் இதனை அடைய முடியாது” என்று மொனாகோவில் நேற்று இரவு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் வான் டிஜ்க் குறிப்பிட்டார்.  

“இது நீண்ட பயணமாக இருந்ததோடு அந்த பயணத்தின் ஓர் அங்கம் இது. இந்த விருதை வென்றதற்கு நான் மிகவும் பெருமை கொள்கிறேன். எனக்கு உதவிய எல்லோருக்குமான பாராட்டாக இது உள்ளது” என்றும் அவர் கூறினார். 

இந்த விருது விழாவின் முதல் விருது வழங்கப்பட்ட 2010-11 க்கும் பின்னர் இதனை வெல்லும் முதலாவது பின்கள வீரராகவும் வான் டிஜ்க் பதிவானார்.  

பின்கள வீரர் ஒருவருக்காக உலகின் அதிக தொகையான 91.4 மில்லியன் டொலர் விலைக்கு கடந்த 2018 ஜனவரியில் சௌதம்டனில் இருந்து லிவர்பூலில் அவர் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அந்தப் பருவத்தின் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு லிவர்பூர் அணியை முன்னேறச் செய்ய பெரிதும் உதவினார். எனினும் அந்த தொடரில் லிவர்பூல் இறுதிப் போட்டியில் ரியல் மெட்ரிட்டிடம் தோற்றது. 

எனினும், கடந்த பருவத்தில் சம்பியன்ஸ் லீக்கை வென்று 2012 ஆம் ஆண்டுக்கு பின் லிவர்பூல் பிரதான கிண்ணம் ஒன்றை வெல்ல பங்காற்றிய 28 வயதான வான் டிஜ்க் ப்ரீமியர் லீக்கிலும் மன்செஸ்டர் சிட்டி அணிக்கு மாத்திரம் இரண்டாவது ஆகி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க தனது திறமையை வெளிப்படுத்தினார். நெதர்லாந்து தேசிய அணியிலும் இடம்பெற்றிருக்கும் அவர் தேசிய லீக் இறுதிப் போட்டி வரை முன்னேறி ரொனால்டோவின் போர்த்துக்கல் அணியிடம் தோற்றார். 

முந்தைய எட்டு விருதுகளில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் ஐந்து தடவை வெற்றி பெற்றிருப்பதோடு இவர்கள் தவிர அன்ட்ரேஸ் இனியஸ்டா (2012), பிரான்க் ரிபெரி (2013) லூகா மொட்ரிக் (2018) ஆகியோரும் விருதை வென்றனர்.   

லியோன் அணிக்காக மகளிர் சம்பியன்ஸ் லீக்கை வெல்ல உதவிய லூசி பிரோன்ஸ் இங்கிலாந்து அணி மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி வரை முன்னேறுவதற்கு தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

UEFA சிறந்த வீராங்கனை விருதை வெல்லும் இங்கிலாந்து வீராங்கனையாகவும் 27 வயதுடைய பிரோன்ஸ் பதிவானார். 

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<