Thepapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்” உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதலாவது சுற்றின் ஐந்தாவது நாள் ஆட்டங்கள் இன்றைய தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.
மன்னார் கில்லறி விளையாட்டுக் கழகம் எதிர் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம்
மன்னார் லீக்கின் முன்னணி அணியான கில்லறி அணியை எதிர்த்து, வடமராட்சி லீக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் இளம் அணியான கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி மோதியது.
“வடக்கின் கில்லாடி யார்?” நான்காம் நாள் போட்டிகளின் முடிவுகள்
போட்டியின் முதல் பாதியின் 24 ஆவது நிமிடத்தில் றோஞ்சர்ஸ் அணி வீரர் உள்ளனுப்பிய பந்தை கில்லறியின் பின்கள வீரர்கள் வெளியனுப்புவதற்கு முயற்சித்த வேளையில் அந்த பந்து ஓன் கோலாக (Own Goal) மாறியது.
பின்னர் இரு அணியினரும் கோல் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எவையும் வெற்றியளிக்கவில்லை.
கில்லறி அணியினர் பெற்றுக்கொடுத்த ஓன் கோலுடன், போட்டியில் வெற்றிபெற்ற கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேவேளை மன்னார் லீக்கின் ஜாம்பவன்களான கில்லறி அணியினர் துரதிஷ்டவசமாக தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறுகின்றனர்.
முழு நேரம்: மன்னார் கில்லறி விளையாட்டுக் கழகம் 1 – 0 கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம்
ஆட்டநாயகன் – மாதுஜன்
- இரண்டாவது சுற்றுப் போட்டிகள்
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் எதிர் முல்லைத்தீவு சுப்பர் றாங் விளையாட்டுக் கழகம்
பிரபல வீரர்களை உள்ளடக்கிய யாழ் லீக்கின் முன்னணி அணியான றோயல் அணியை எதிர்த்து முல்லைத்தீவு லீக்கின் ஏக பிரதிநிதியான சுப்பர் றாங் அணி மோதியது.
போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் சுப்பர் றாங் அணியின் உதயவர்மன் முதலாவது கோலை பதிவு செய்தார். சில நிமிடங்களிலேயே றோயல் அணியின் நம்பிக்கைக்குரிய வீரர் எடிசன் பிகுராடோ ஒரு கோலைப் போட்டு கோல் கணக்கை சமன் செய்தார்.
24 ஆவது நிமிடத்தில் நிதர்சன் ஒரு கோலைப் போட்டு முதல் பாதி ஆட்டத்தின் நிறைவின் போது றோயல் அணியை முன்னிலைப்படுத்தினார்.
இரண்டாவது பாதி ஆட்டத்தின் போது இரு அணிளினதும் கோல் பெறும் முயற்சிகள் தோல்வியில் நிறைவடைய, கோல்கள் ஏதுமின்றி இரண்டாவது பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
போட்டியில் வெற்றிபெற்ற ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினர் ”வடக்கின் கில்லாடி யார்” தொடரின் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
முழு நேரம்: ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் 2 – 1 முல்லைத்தீவு சுப்பர் றாங் விளையாட்டுக் கழகம்
ஆட்டநாயகன் – நிதர்சன்
- கோல் பெற்றவர்கள்
முல்லைத்தீவு சுப்பர் றாங் விளையாட்டுக் கழகம் – உதயவர்மன் 10′
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் – எடிசன் 14′, நிதர்சன் 24′
”வடக்கின் கில்லாடி யார்” தொடரின் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறப்போகும் இறுதி இரண்டு அணிகளைத் தீர்மானிப்பதற்கான போட்டிகள் நாளைய தினம் (20) அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பலம் கொண்ட சீனாவிடம் படுதோல்வியடைந்த இலங்கை மங்கையர்
பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் இரணைமாதாநகர் சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நாவற்குழி அன்னை விளையாட்டுக் கழகமும். பிற்பகல் 4.45 மணிக்கு இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.
”வடக்கின் கில்லாடி யார்” தொடரில் போட்டி முடிவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் புகைப்படங்களுக்கு Thepapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க