அமெரிக்காவில் உஷான் திவங்கவுக்கு மற்றுமொரு வெற்றி

256

இலங்கையின் உயரம் பாய்தல் நட்சத்திரமான உஷான் திவங்க பெரேரா, அமெரிக்காவில் நடைபெற்ற Lone Star Conference Outdoor Championship போட்டியில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

டெக்சாஸில் இன்று (07) நடைபெற்ற லோங் ஸ்டார் கன்பிரன்ஸ் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குகொண்ட அவர், 2.20 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பிடித்தார்.

நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவரான 24 வயதுடைய உஷான் திவங்க, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் வழங்கப்பட்ட விசேட புலமைப்பரிசிலின் கீழ் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஏஎண்ட்எம் வணிக பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியுடன், உயரம் பாய்தலுக்கான மேலதிக பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இதனிடையே, குறித்த போட்டியில் 2.11 மீட்டர் உயரத்தைத் தாவி ஜஸ்டின் லீவிஸ் இரண்டாவது இடத்தையும், 2.08 மீட்டர் உயரத்தைத் தாவிய டாகர் ஹில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்;.

இதேவேளை, குறித்த போட்டியில் பங்குகொண்ட மற்றுமொரு இலங்கை வீரரான செனிரு அமரசிங்க, 2.00 மீட்டர் உயரத்தைத் தாவி 5ஆவது இடத்தை தனதாக்கினார்.

 >>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<