LPL தொடரில் தசுன் ஷானகவுக்கு அபராதம்!

Lanka Premier League 2022

997

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் தம்புள்ள ஓரா அணியின் தலைவராக செயற்பட்டுவரும் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக கடந்த 8ம் திகதி நடைபெற்ற LPL தொடரின் போட்டியின் போது, நடுவருக்கு எதிராக விதிமுறையை மீறி முரண்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.

>> குர்பாஸ், அவிஷ்க அபாரம் ஜப்னா கிங்ஸ் அடுத்த வெற்றி

அதன்படி தசுன் ஷானகவுக்கு அவருடைய போட்டிக்கட்டணத்தில் 40 சதவீதம் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது. ஷானக 3000 அமெரிக்க டொலர்கள் டொலர்களை அபரமாக செலுத்தவுள்ளார் என்பதுடன், இந்த தொகையானது இலங்கை ரூபாவில் சுமார் 11 இலட்சம் ரூபாவாகும். தசுன் ஷானகவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை மாத்திரமின்றி 2 தரக்குறைப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தசுன் ஷானக தன்னுடைய குற்றத்தை போட்டி மத்தியஸ்தரிடம் ஒப்புக்கொண்டதன் காரணமாக இந்த மேலதிக விசாரணைகள் அவசியமல்ல என குறிப்பிடப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக்கில் இம்முறை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள தம்புள்ள ஓரா அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<