உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரான ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த 29 வயது நிரம்பிய உசேன் போல்ட் பின் தொடையில் இருக்கும் தசை நார் சுளுக்கின் காரணமாக ஜெர்மனி நாட்டில் உள்ள முனிச் நகரில் சிகிச்சை பெற உள்ளார்.
இவ்வாறு அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில் இருந்தாலும் அவர் எதிர்வரும் வெள்ளிகிழமை செக் குடியரசசில் நடைபெறும் ஓட்டப் பந்தய போட்டியில் பங்கெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை கேமன் இன்விடேஷனல் போட்டியின் போதே அவர் உபாதைக்குள்ளாகி இருப்பதாக அவரது பயிற்சியாளர் க்லென் மில்ஸ் கூறியுள்ளார்.
அத்தோடு கடந்த சனிக்கிழமை கேமன் இன்விடேஷனல் போட்டியில் 100 மீ. ஓட்டப் பந்தயத்தில் உசேன் போல்ட் முதலிடத்தைப் பெற்றிருந்தமை முக்கிய அம்சமாகும்.
உசேன் போல்ட் தனது ஓட்டப் பந்தய வாழ்க்கையில் 11 தனிப்பட்டதங்க பதக்கங்களை ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் மட்டத்தில் பெற்றுள்ளார் என்பது இன்னுமொரு முக்கிய அம்சமாகும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்