இன்று அதிகாலை நடந்த கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் கொஸ்டரிகாவைப் பந்தாடி அமெரிக்கா அபார வெற்றிபெற்றது.
4ஆவது கோபா கால்பந்துப் போட்டி அமெரிக்காவில் நடந்துவருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ளன.இவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 9–வது ‘லீக்’ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடந்தது.
“ஏ” பிரிவில் உள்ள அமெரிக்கா– கொஸ்டரிகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் அமெரிக்க அணி ஆதிக்கம் செலுத்தியது.
9ஆவது நிமிடத்தில் அமெரிக்காவுக்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. இதைப் பயன்படுத்தி டெம்சே முதல் கோலை அடித்தார். இதனால் உற்சாகம் அடைந்த அமெரிக்க வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். 37ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஜோன்ஸ் 2ஆவது கோலை அடித்தார்.
மெசியில்லாமல் ஆர்ஜென்டினாவிற்கு வெற்றி
42ஆவது நிமிடத்தில் வுட் 3ஆவது கோலை அடிக்க முதல் பாதி முடிவில் அமெரிக்கா 3–0 என்ற கோல் கணக்கில் வலுவான நிலையில் இருந்தது.
2ஆவது பாதி ஆட்டத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கமே ஓங்கியது. ஆட்டம் முடியும் தருவாயில் அமெரிக்கா 4ஆவது கோலை அடித்தது. 87ஆவது நிமிடத்தில் சூசி இந்த கோலை அடித்தார். ஆட்ட நேர முடிவில் அமெரிக்கா 4–0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது. கடைசி வரை கொஸ்டரிகாவால் கோல் அடிக்க முடியவில்லை. ஒரு கோல் அடித்த டெம்சே இரண்டு கோல் அடிக்க உதவியாக இருந்தார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்