நாளை (19) தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டியினை அடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
தினேஷ் சந்திமாலின் அரைச்சதத்தோடு வலுப்பெற்றிருக்கும் இலங்கை
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 103 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2019ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை வெல்வதற்கும் முக்கிய காரணமாக மாறியிருந்தார்.
இந்த நிலையில் 31 வயது நிரம்பிய ஸ்டோக்ஸ் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற போதும் டெஸ்ட் மற்றும் T20I போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக தொடர்ந்து ஆடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதேநேரம் பென் ஸ்டோக்ஸ் அண்மையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவராக நியமனம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
“நான் (கிரிக்கெட்டின்) இந்த வடிவத்தில் (அதாவது ஒருநாள் போட்டிகளில்) இருந்து ஓய்வு பெற தீர்மானித்திருக்கின்றேன். இது உண்மையிலேயே எடுப்பதற்கு மிகவும் கடினமான ஒரு தீர்மானம். இங்கிலாந்திற்காக எனது சகாக்களுடன் இணைந்து விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தினையும் விரும்புகின்றேன். எங்களது பயணம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.” என பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தனது ஓய்வு குறித்து குறிப்பிட்டிருந்தார்.
மூன்றாவது தடவையாக நடைபெறவிருந்த LPL தொடர் ஒத்திவைப்பு!
நாளைய போட்டியினை தவிர்த்து இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடிய 103 ஒருநாள் போட்டிகளையும் நோக்கும் போது அவர் 39.44 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 2919 ஓட்டங்கள் குவித்திருப்பதோடு, 74 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<