டி-10 கிரிக்கெட் தொடரில் கேரளா கிங்ஸ் அணிக்காக உபுல் தரங்க ஒப்பந்தம்

884

இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க, எதிர்வரும் 21 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியாத்தில் ஆரம்பமாகவுள்ள டி-10 லீக் தொடரில் கேரளா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ள, அணிக்கு பத்து ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட 8 அணிகள் பங்கேற்கும் டி-10 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் ஓப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

ஜோ ரூட்டின் சதத்தையும் தாண்டி சுழல் பந்துவீச்சால் மிரட்டிய அகில தன்னஜய

கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், .

இதில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க மராதா அரேபியன்ஸ் அணிக்காகவும், இசுறு உதான கராச்சியன்ஸ் அணிக்காகவும், குசல் ஜனித் பெரேரா பெங்கால் டைகர்ஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதுடன், நிரோஷன் திக்வெல்ல கேரளா கிங்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளார்.

T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்தும் இரண்டாவது தடவையாக…

இது இவ்வாறிருக்க, 33 வயதான உபுல் தரங்க, டி-10 லீக் தொடரின் நடப்புச் சம்பியனான இயென் மோர்கன் தலைமையிலான கேரளா கிங்ஸ் அணிக்காக முதல் தடவையாக களமிறங்கவுள்ளார்.

தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்ற உபுல் தரங்க, வெளிநாடுகளில் நடைபெறுகின்ற போட்டித் தொடர்களில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகளை அண்மைக்காலமாக தவறவிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் சில்லெட் சிக்ஸர்ஸ் அணிக்காக முதல் தடவையாகவும் விளையாடியிருந்தார்.

இதுவரை 26 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள உபுல் தரங்க, 16.28 என்ற சராசரியுடன் 407 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை டி-10 லீக் தொடரில் நடப்பு சம்பியனான கேரளா கிங்ஸ் அணி, 21 ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் பக்ஹதூன் அணியை எதிர்த்தாடவுள்ளது.

கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர்களான இயென் மோர்கன், கிறிஸ் கெய்ல், கிரென் பொல்லார்ட், போல் ஸ்ட்ரேலிங், ஜுனைட் கான், சந்தீப் லமிச்சென்னெ, டொம் கரான், வெய்ன் பார்னெல் உள்ளிட்ட வீரர்கள் கேரளா கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க