இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இயங்கிவரும் மல்க்ரெவ் கிரிக்கெட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் 2020/2021 பருவகாலத்துக்கான போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஒவ்வொரு அணிகளும் தமது அணிகளை அறிவித்து வருவதுடன், வெளிநாட்டு வீரர்களையும் ஒப்பந்தம் செய்து வருகின்றன.
தரங்கவுக்கு கொரோனா தொற்று; கண்காட்சி T20 போட்டி ஒத்திவைப்பு
இதில் அவுஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டிகளில் பிரிவு 3 (டிவிஷ்ன்-3) இன் கீழ் விளையாடி வருகின்ற முன்னணி அணிகளில் ஒன்றாக மல்க்ரெவ் கிரிக்கெட் கழகம் விளங்குகின்றது.
பெரும்பாலான இலங்கை வம்சாவளி வீரர்களைக் கொண்ட இந்தக் கழகத்தின் தலைவராக, இலங்கையின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், டில்ஷானுடன் நீண்டகாலம் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி பல சாதனைகளை நிகழ்த்திய முன்னாள் வீரரான உபுல் தரங்கவை இந்தப் பருவகாலத்துக்காக ஒப்பந்தம் செய்வதாக மல்க்ரெவ் கிரிக்கெட் கழகம் அதன் டுவிட்டரின் ஊடாக அறிவித்துள்ளது.
🚨 MULGRAVE SIGNS UPUL THARANGA 🚨
Mulgrave Cricket Club are thrilled to announce the signing of former Sri Lankan international, Upal Tharanga!
Upal played 31 Tests for Sri Lanka, as well as 235 ODIs and 125 T20s.
Please join us in welcoming Upal to the club!#GoMully pic.twitter.com/KaAfQjwiay
— Mulgrave CC (@Mulgrave_CC) May 2, 2021
2005ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான உபுல் தரங்க, இலங்கை அணிக்காக 31 டெஸ்ட், 235 ஒருநாள் மற்றும் 125 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 3 டெஸ்ட் சதங்களும், 15 ஒருநாள் சதங்களும், 2 T20 சதங்களும் அடங்கும்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும், அணித் தலைவராகவும் இலங்கை அணிக்காக சுமார் 2 தசாப்தங்களாக விளையாடிய உபுல் தரங்க, கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<