பங்களாதேசில் நடைபெற்றுவரும் டாக்கா பிரீமியர் கிரிக்கட் லீக் 2016 போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க 3ஆவது இடத்தில் உள்ளார்.
குசல் பெரேராவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
12 அணிகள் பங்குபற்றும் 50 ஓவர்களைக் கொண்ட டாக்கா பிரீமியர் கிரிக்கட் லீக் 2016 போட்டித் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஆரம்பித்தது. 36 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் தற்போது வரை 33 போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இப்போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் இலங்கை அணி வீரர் உபுல் தரங்க 3ஆவது இடம் பிடித்துள்ளார். இந்தப் பருவ டாக்கா பிரீமியர் கிரிக்கட் லீக் 2016 போட்டித் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் பங்குபற்றியுள்ள 31 வயது நிரம்பிய உபுல் தரங்க 74.75 என்ற துடுப்பாட்ட சராசரியில் 299 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதிக பட்ச ஓட்டமாக ஆட்டம் இழக்காமல் பெற்ற 90 ஓட்டங்களாகும். அத்தோடு தரங்க இத்தொடரில் 32 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களையும் விளாசி உள்ளார் என்பது குறுப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்