வீதி பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும், வீதி பாதுகாப்பு உலக T20 தொடருக்கான இலங்கை லெஜன்ட்ஸ் குழாத்தில், முன்னாள் வீரர் உபுல் தரங்க இணைக்கப்பட்டுள்ளார்.
உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக, கடந்த 23ம் திகதி அறிவித்திருந்தார். இந்தநிலையில், அடுத்த வாரம் நடைபெறவுள்ள வீதி பாதுகாப்பு உலக T20 தொடருக்கான இலங்கை லெஜன்ட்ஸ் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
Read : இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் ஏற்கனவே பல முன்னாள் வீரர்கள் இணைக்ககப்பட்டிருந்தனர். குறிப்பாக, உபுல் தரங்க ஓய்வை அறிவித்து லெஜன்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருக்கும் நிலையில், இதற்கு முன்னர் வேகப்பந்துவீச்சாளர் தம்மிக பிரசாத் ஓய்வை அறிவித்த பின்னர், லெஜன்ட்ஸ் அணியில் விளையாடுவதாக அறிவித்தார்.
தற்போது ஓய்வை அறிவித்து லெஜன்ஸ் அணியில் வீரர்கள் இணைந்துள்ளதுடன், முன்னணி வீரர்களான ரங்கன ஹேரத் சனத் ஜயசூரிய, ரசல் ஆர்னல்ட் மற்றும் நுவான் குலசேகர ஆகிய வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியாவின் ராஜ்பூரில் ஆரம்பமாகவுள்ள இந்த வீதி பாதுகாப்பு உலக T20 தொடரில், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளதுடன், போட்டித்தொடர் மார்ச் 5ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இதில், இலங்கை லெஜன்ட்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் (மார்ச் 6) மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை லெஜன்ட்ஸ் குழாம்
- திலகரட்ன டில்ஷான் (தலைவர்)
- சனத் ஜயசூரிய
- உபுல் தரங்க
- மலிந்த வர்ணபுர
- சாமர கபுகெதர
- சாமர சில்வா
- ரசல் ஆர்னல்ட்
- பர்வீஸ் மஹ்ரூப்
- நுவான் குலசேகர
- ரங்கன ஹேரத்
- அஜந்த மெண்டிஸ்
- தம்மிக பிரசாத்
- திலின துஷார
- டுலன்ஜன வீரசிங்க
- அணி முகாமையாளர் – ஷியாம் இம்பெட்
- அணி வைத்தியர் – மஞ்சுல பிரசாத்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க