கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான குசல் மெண்டிஸ்

379
Covid reported for Kusal Mendis

இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான குசல் மெண்டிஸிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> WATCH – அவுஸ்திரேலியாவுக்கு பயணமான இலங்கை கிரிக்கெட் அணி!

தற்போது அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது. அந்தவகையில் இந்த T20I தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்ற குசல் மெண்டிஸ் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளானதை இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க உறுதி செய்திருக்கின்றார்.

அதோடு குசல் மெண்டிஸ் உடல்நலம் தேறாத சந்தர்ப்பத்தில், இலங்கை அணியின் விக்கெட்காப்பாளராக அவுஸ்திரேலிய தொடரின் போது தினேஷ் சந்திமால் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் ஏற்கனவே கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளான சகலதுறைவீரர் சாமிக்க கருணாரட்ன, தற்போது பூரண சுகமடைந்திருக்கும் நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இன்று (08) இரவு இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> WATCH – அவுஸ்திரேலியாவுக்கு பயணமான இலங்கை கிரிக்கெட் அணி!

இதேவேளை கொவிட்-19 தொற்றுக்கு ஆளான மற்றுமொரு வீரரான வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷாரவும் இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஏற்கனவே இணைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேவேளை இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20I தொடர்  எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) சிட்னியில் ஆரம்பமாகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<