23 வயதிற்குட்பட்டோருக்கான 20 நாட்களைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் ஜூலை மாதம் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டியில் 4ஆம் திகதி ராகம கிரிக்கட் கழகம் மற்றும் இராணுவ விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகள் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் மோதுகின்றன. அத்தோடு இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ஜூலை மாதம் 24ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் 14 அணிகள் 3 நாட்களைக் கொண்ட பிரிவு ஒரு போட்டிகளாக விளையாடினார்கள். இதில் விளையாடும் வீரர்களுக்குத், தமது திறனை வெளிக்காட்டி இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து விளையாட ஒரு பொன்னான வாய்ப்பாக இருந்தது.
இலங்கை கிரிக்கட் தொடர்களை தீர்மானிக்கும் குழு இந்த U23 ஒருநாள் போட்டித் தொடரை 4 குழுக்களாகப் பிரித்து நடாத்த உள்ளது. அந்த அடிப்படையில் மொத்தமாக 23 அணிகள் இந்தத் தொடரில் பங்குபற்ற உள்ளன. கடந்த பருவகாலத்தில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையிலேயே தான் இவ்வாறு 4 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் இறுதிப் போட்டியில் மழை குறிக்கிட்டதனால் இறுதிப் போட்டியில் விளையாடிய முவர்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் ஆகிய அணிகள் கூட்டுச் சம்பியனாகியது.
இரண்டாம் பிரிவு அணிகள் பங்குபற்றும் போட்டித் தொடரில் 45 அணிகள் 8 குழுக்காளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தொடரின் முதலாவது போட்டி ஜூலை மாதம் 02ஆம் திகதி கட்டுநேரியவில் ஆரம்பமாகிறது. இதில் லியோ கிரிக்கட் கழக அணி எக்ஸ்விரைட்ஸ் கிரிக்கட் கழக அணியை எதிர்கொள்கிறது.
ஆரம்பக்கட்ட போட்டிகள் லீக் முறையில் நடைபெறவுள்ளதோடு குழுக்களில் முதல் 2 இடத்தைப் பெரும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெறும். 50 ஓவர்கள் கொண்ட இந்தத் தொடர் முடிவுற்ற பிறகு 2 வாரங்களில் 23 வயதிற்குட்பட்டோர் முதலாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான டி20 போட்டித் தொடர் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Division One Participating Teams
Group A | Group B | Group C | Group D |
Tamil Union C & AC | Moors SC | Ragama CC | Galle CC |
NCC | CCC | Colts CC | SSC |
Negombo CC | Saracens SC | Army SC | Chilaw Marians CC |
Bloomfield | BRC | SL Ports Authority CC | Badureliya CC |
Navy SC | Air Force SC | Kurunegala Youth CC | Kalutara Town CC |
Panadura SC | Police SC | Lankan CC |
Under 23 Division 1 Tournament – Full Fixtures
Date | Home | Opponent | Venue |
4th July | Ragama CC | Army SC | Thurstan |
5th July | Saracens SC | BRC | Surrey |
6th July | Tamil Union C & AC | NCC | P Sara |
Bloomfield C & AC | Navy SC | Bloomfield | |
Negombo CC | Panadura SC | Kadirana | |
Moors SC | CCC | Moors | |
Colts CC | Ragama CC | Colts | |
Kurunegala Youth CC | Police SC | Welagedara | |
Galle CC | SSC | SSC | |
Chilaw Marians CC | Badureliya CC | FTZ | |
7th July | Kalutara Town CC | Lankan CC | Surrey |
Army SC | SL Ports Authority CC | Panagoda | |
9th July | Bloomfield C & AC | Tamil Union C & AC | Bloomfield |
NCC | Panadura SC | NCC | |
Navy SC | Negombo CC | Welisara | |
Saracens SC | Moors SC | Moors | |
CCC | Air Force SC | CCC | |
Kurunegala Youth CC | Colts CC | Dambulla | |
SL Ports Authority CC | Police SC | Kadirana | |
Chilaw Marians CC | Galle CC | FTZ | |
SSC | Kalutara Town CC | SSC | |
Lankan CC | Badureliya CC | Panagoda | |
10th July | Tamil Union C & AC | Navy SC | P.Sara |
Negombo CC | NCC | Kadirana | |
Panadura SC | Bloomfield C & AC | Panadura | |
Moors | BRC | Moors | |
Air Force SC | Saracens SC | TBC | |
SL Ports Authority CC | Ragama CC | FTZ | |
Colts CC | Police SC | Colts | |
Army SC | Kurunegala Youth CC | Panagoda | |
SSC | Lankan CC | SSC | |
Kalutara Town CC | Chilaw Marians CC | Surrey | |
12th July | Badureliya CC | Galle CC | Surrey |
Lankan CC | Chilaw Marians CC | FTZ | |
13th July | NCC | Navy SC | NCC |
Bloomfield C & AC | Negombo CC | Bloomfield | |
Panadura SC | Tamil Union C & AC | Panadura | |
BRC | CCC | CCC | |
Moors SC | Air Force SC | Moors | |
Colts CC | SL Ports Authority CC | Colts | |
Police SC | Army SC | Panagoda | |
Galle CC | Kalutara Town CC | Surrey | |
14th July | Ragama CC | Kalutara Town CC | Thurstan |
SSC | Badureliya CC | SSC | |
15th July | BRC | Air Force SC | FTZ |
Badureliya | Kalutara Town CC | Surrey | |
16th July | Tamil Union C & AC | Negombo CC | P.Sara |
NCC | Bloomfield C & AC | NCC | |
Navy SC | Panadura SC | Welisara | |
CCC | Saracens SC | CCC | |
Police SC | Ragama CC | Dambulla | |
Army SC | Colts CC | Panagoda | |
Kurunegala Youth CC | SL Ports Authority CC | Welagedara | |
Galle CC | Lankan CC | Surrey | |
Chilaw Marians | SSC | FTZ | |
19th July | Quarter Final 1 | NCC | |
Quarter Final 2 | Colts | ||
Quarter Final 3 | CCC | ||
Quarter Final 4 | Moors | ||
22nd July | Semi Final 1 | SSC | |
Semi Final 2 | NCC | ||
24th July | Final | SSC |
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்