19 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலைகளின் டிவிஷன் – III பிரிவு B (Tier B) ஒருநாள் கிரிக்கெட் தொடரின் காலிறுதி மோதலில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணியினை, கம்பொல விக்கிரமபாகு மத்திய கல்லூரி 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதோடு, அந்த வெற்றியுடன் பிரிவு B அணிகளுக்குரிய அரையிறுதிப் போட்டிக்கும் தெரிவாகியிருக்கின்றது.
>>UAE T20 லீக்கில் IPL அணிகளுக்கு முன்னுரிமை
இரு அணிகளும் மோதிய போட்டி மின்னேரிய கன்னர்ஸ் அரங்கில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததுடன், 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை எடுத்தது.
புனித மைக்கல் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் விளாசிய லதர்சன் 62 ஓட்டங்கள் எடுக்க, மற்றைய அரைச்சதம் பெற்ற யதுஷன் 55 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில் விக்கிரமபாகு மத்திய கல்லூரி அணிக்காக நிமன்த சொய்ஸா 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 196 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய விக்கிரமபாகு மத்திய கல்லூரி அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 30.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 196 ஓட்டங்களுடன் அடைந்தது.
விக்கிரமபாகு மத்திய கல்லூரி அணியின் வெற்றியினை சசங்க பண்டார 56 ஓட்டங்கள் பெற்றும், தருஷ சம்பத் 50 ஓட்டங்கள் பெற்றும் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் புதிய தலைவராக சகீப் நியமனம்
புனித மைக்கல் கல்லூரியின் பந்துவீச்சில் ஏற்கனவே துடுப்பாட்டத்தில அசத்திய யதுசன் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும் அது வீணாகியது.
போட்டியின் சுருக்கம்
புனித மைக்கல் கல்லூரி – 195/8 (50) லதர்சன் 62, A. யதுசன் 55, நிம்னத சொய்ஸா 2/35
விக்கிரமபாகு மத்திய கல்லூரி – 196/5 (30.2) சசங்க பண்டார 56*, தருஷ சம்பத் 50*, A. யதுசன் 2/36
முடிவு – விக்கிரமபாகு மத்திய கல்லூரி 5 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<