சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டி இன்று நிறைவடைந்ததோடு மேலும் ஒரு போட்டி ஆரம்பமானது.
மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் டி மெசனோட் கல்லூரி, கந்தானை
கந்தானையில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 102 ஓட்டங்களுக்கு சுருண்டு நெருக்கடியை சந்தித்த மலியதேவ கல்லூரி அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சுதாகரித்து ஆடி போட்டியை சமநிலையில் முடித்தது.
மலேஷியாவில் முதல் வெற்றியை சுவைத்த இலங்கை கனிஷ்ட அணி
ஆட்டத்தின் கடைசி நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த டி மெசனோட் கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றது. சாலிய ஜூட் (73) மற்றும் மிதில கீத் (53) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர்.
பந்து வீச்சில் விஷ்வ திசாநாயக்க 5 விக்கெட்டுகளை வீழ்த்த சிஹின சிதுமின 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
எனினும் மலியதேவ கல்லூரி 115 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய நிலையிலேயே இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. நெருக்கடியுடன் களமிறங்கிய மலியதேவ கல்லூரிக்கு கவீன் பண்டார மற்றும் முதித் பிரேமதாச ஆபாரமாக துடுப்பெடுத்தாடி அணியை முன்னிலை பெறச் செய்தார். சதம் பெற்ற பண்டார ஆட்டமிழக்காது 105 ஓட்டங்களை குவித்ததோடு பிரேமதாச 88 ஓட்டங்களை பெற்றார்.
இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களை பெற்ற மலியதேவ கல்லூரி கடைசி நேரத்தில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இதன்படி 144 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பத்த டி மெசனோட் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 58 ஓட்டங்களை பெற்றது.
போட்டியின் சுருக்கம்
மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்) – 102 (35.5) – சன்ஜீவன் பிரியதர்ஷன் 43*, முதித் பிரேமதாச 22, ரொமல் பெர்னாண்டோ 5/22, சிஹின சிதுமின 3/22
டி மெசனோட் கல்லூரி, கந்தானை (முதல் இன்னிங்ஸ்) – 217 (51.3) – சாலிய ஜூட் 73, மிதில கீத் 53, பிரவீன் பொன்சேகா 22, மிதுல் செனரத் 21, விஷ்வ திசானாயக்க 5/61, துலாஜ் ரணதுங்க 4/58
மலியதேவ கல்லூரி, குருநாகல் (இரண்டாது இன்னிங்ஸ்) – 259/9d (73.3) – கவீன் பண்டார 105*, முதித் பிரேமதாச 88, யோமல் பெர்னாண்டோ 3/69, சிஹின சிதுமின 2/23
டி மெசனோட் கல்லூரி, கந்தானை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 58/1 (13)
முடிவு: போட்டி சமநிலையில் முடிவு
குருகுல கல்லூரி, களனி எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு
கெம்பல் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குருகுல கல்லூரி முதல் இன்னிங்ஸில் வலுவான ஓட்டங்களை பெற்று எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தது.
டி மெசனோட் கல்லூரி வலுவான நிலையில்
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட குருகுல கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றது. எந்த வீரரும் அரைச்சதம் பெறாதபோதும் பெரும்பாலான வீரர்கள் 30க்கும் குறையாத ஓட்டங்களை பெற்றனர்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த வெஸ்லி கல்லூரி அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 26 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 42 ஓட்டங்களை பெற்றது.
நாளை இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும்.
போட்டியின் சுருக்கம்
குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்) 258 (69.5) – பிருதுவி பிம்சர 48, பதும் மஹேஷ் 46, திமிர நயனதரு 35, பிரவீன் நிமேஷ் 32, நுவன் சானக்க 30, ராகுல் குணசேகர 4/57, முவின் சுபசிங்க 2/64, சகுன்த லியனகே 2/66
வெஸ்லி கல்லூரி, கொழும்பு – 42/3 (26)