சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் 19 வயதின் கீழ் டிவிசன் 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுத்தொடரின் 3 போட்டிகள் இன்று நிறைவுற்றன.
புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் புனித சேவேஸஸ் கல்லூரி, மாத்தறை
மாத்தறை உயன்வத்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் புனித பேதுரு கல்லூரி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஜோசப் வாஸுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்த குருகுல கல்லூரி
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் 19 வயதின் கீழான பாடசாலை அணிகளுக்கு இடையிலான (இரண்டு நாட்கள் கொண்ட) கிரிக்கெட் தொடரில் இன்று (16) ஆறு போட்டிகள் நிறைவடைந்தன. டி.எஸ் சேனநாயக்க கல்லூரி எதிர் தர்மாசோக கல்லூரி,
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பேதுரு கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது. இதன்படி பேதுரு கல்லூரி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புனித சேவேயஸ் கல்லூரி அணி 66 ஓட்டங்களுக்குள் சுருண்டது. மொஹமட் அமீன் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் சச்சின் சில்வா 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸினைத் தொடர்ந்த புனித பேதுரு வீரர்கள் 137 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். சுலக்ஷன பெர்னாண்டோ 34 ஓட்டங்களைப் பெற்றார். சேவேஸஸ் கல்லூரியின் சசிக துல்ஷான் மற்றும் கேஷர நுவந்த ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
பின்னர் போட்டியின் இறுதி இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய புனித சேவேஸஸ் கல்லூரி அணி 69 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தொல்வியைடைந்தது.
போட்டியின் சுருக்கம்
புனித பேதுரு கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 138/10 (60.1) பபசர ஹேரத் 36*, ஷாலித் பெர்னாண்டோ 23. சசிக துல்ஷான் 4/28, திலான் ப்ரஷான் 2/24, சரித் ஹர்ஷன 2/41.
புனித சேவேஸஸ் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 66/10 (33.1) மொஹமட் அமீன் 3/11, சச்சின் சில்வா 3/14, பபசர 2/07, தாரிக் சபூர் 2/14.
புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 137/10 (45.4) சுலக்ஷன பெர்னாண்டோ 34, ஷனோன் பெர்னாண்டோ 26. சசிக துல்ஷான் 4/40, கேஷர நுவந்த 4/41.
புனித சேவேஸஸ் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 69/10 புஷ்பிக்க தில்ஷான் 32. மொஹமட் அமீன் 5/26, சச்சின் சில்வா 3/30
முடிவு – புனித பேதுரு கல்லூரி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இலங்கை இளையோர் அணி
பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் டக்வர்த்-லுவிஸ் (Duckworth-Lewis) முறையில் 39 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை இளையோர் அணி தொடரின் காலிறுதிக்கு முன்னேறுவதில் சவாலை எதிர்கொண்டுள்ளது.
மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை
இரத்மலானை NSCA மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற போதிலும் முதல் இன்னிங்ஸின்படி மஹாநாம கல்லூரி வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மஹாநாம வீரர்கள் தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றனர்.
பவான் ரத்னாயக 51 ஓட்டங்களைப் பெற, மொரட்டுவை தரப்பில் சாவிந்து பீரிஸ் 3 விக்கெட்டுக்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அணி 198 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவிந்து பெரேரா 63 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் மஹாநாம கல்லூரியின் லஹிரு விதான 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸினைத் தொடர்ந்த மஹாநாம கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக் கொள்ளப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
மஹாநாம கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 236/10 (68) பவான் ரத்னாயக 51, பிஷான் மென்டிஸ் 48, வத்சல பெரேரா 27. சவிந்து பீரிஸ் 3/40.
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 198/10 (60.5) அவிந்து பெர்னாண்டோ 63, விஷ்வ பீரிஸ் 34, சுகத் மென்டிஸ் 32. லஹிரு விதான 6/34, ஹஷான் சந்தீப 2/42, ஹேஷான் ஹெட்டியாராச்சி 2/56
மஹாநாம கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 204/9 (68) வினுக்க ரூபசிங்ஹ 84, ஹேஷான் ஹெட்டியாராச்சி 54*. நாணயக்கார 3/37, விஷ்வ பீரிஸ் 2/36.
முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு
ThePapare Tamil weekly sports roundup – Episode 11
புதிய மாற்றங்களுடனான இலங்கை அணியின் பங்களாதேஷ் பயணம், இளையோர் உலகக் கிண்ணம், கற்புலனற்றோர் உலகக் கிண்ணம் மற்றும் டயலொக் சம்பியன்ஸ் லீக் இறுதி முடிவுகள் என்பன இவ்வாற ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தில்.
லும்பினி கல்லூரி, கொழும்பு எதிர் ஆனந்த கல்லூரி கொழும்பு
கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆனந்த கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 84 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய லும்பினி கல்லூரி அணி 139 ஓட்டங்களைப் பெற்றது. வினு ஹெமலன்கார 34 ஓட்டங்களைப் பெற்றார். ஆனந்தா கல்லூரியின் அசெல் சிஜேரா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 339 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது. அசெல் சிஜேரா 70 ஓட்டங்களையும், சாமல் ஹிருஷான் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களையும், லஹிரு ஹிரண்ய 54 ஓட்டங்களையும் பெற்றனர். லும்பினி கல்லூரியின் விமுக்தி குலதுங்க 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பலோவ் ஓன் முறைக்கு தள்ளப்பட்ட லும்பினி கல்லூரி 116 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆனந்த கல்லூரியின் சாமிக குணசேகர மற்றும் அசெல் சிஜேரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
லும்பினி கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 139/10 (38.1) வினு ஹெமலன்கார 34, அமித தாபரே 29. அசெல் சிஜேரா 5/33
ஆனந்த கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 339/8d (78.1) அசெல் சிஜேரா 70, சமல் ஹிருஷான் 61*, லஹிரு ஹிரண்ய 54. விமுக்தி குலதுங்க 5/109.
லும்பினி கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 116/10 (34.2) சந்துனில் சங்கல்ப 36. சாமிக குணசேகர 4/28, அசெல் சிஜேரா 4/30
முடிவு – ஆனந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 84 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.