இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட கனிஷ்ட அணிகள் பங்குகொள்ளும் மாகாண ரீதியிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மொத்தமாக 10 அணிகள் கொண்ட இந்த தொடரில், தலா ஐந்து அணிகள் என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு போட்டிகள் என மொத்தமாக நான்கு போட்டிகள் இன்றைய தினம் நடைபெற்றன.
தேசிய மட்டத்திலும் இரண்டு விக்கெட்டுக்களைப் பதம் பார்த்தார் கபில்ராஜ்
தென் மாகாணம் எதிர் மேல் மாகாணம் (மத்திய)
பனாகொட இராணுவ மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், B குழுவில் முதலிடத்தில் உள்ள தென் மாகாணம் 77 ஓட்டங்களால் மற்றுமொரு பாரிய வெற்றியை இன்றைய தினம் பதிவு செய்து கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் மாகாண அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில், முதலில் துடுப்பாடக் களமிறங்கிய அவ்வணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 242 ஓட்டங்களை பதிவு செய்தது. சிறப்பாக துடுப்பாடிய ரவின் யசஸ் அதிக பட்ச ஓட்டங்களாக 65 ஓட்டங்களை பதிவு செய்த அதேவேளை சசித் மதுரங்க அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த 45 ஓட்டங்களால் பங்களிப்பு செய்தார்.
பந்து வீச்சில் தென் மாகாண அணிக்கு நெருக்கடி கொடுத்த சந்தோஷ் குணதிலக்க மற்றும் விமுக்தி குலதுங்க தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய மேல் மாகாண மத்திய அணி 38 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 137 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்திருந்தமையினால், பரபோலா முறைப்படி தென் மாகாண அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் தென் மாகாண அணி B குழுவில் முதலிடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
தென் மாகாணம் – 242 (49) – ரவின் யசஸ் 65, சசித் மதுரங்க 45, அவிந்து தீக்க்ஷன 37, ரவிந்து சஞ்சன 22, ரவிஷ்க விஜேசிறி 21, சந்தோஷ் குணதிலக்க 3/19, விமுக்தி குலதுங்க 3/31
மேல் மாகாணம் (மத்திய) – 137/8 (38) – லக்ஷித முனசிங்க 29, சந்தோஷ் குணதிலக்க 28, சஞ்சுல அபேவிக்ரம 24, ரவிஷ்க விஜேசிரி 2/11, திலும் சுதீர 2/29
முடிவு – தென் மாகாணம் 76 ஓட்டங்களால் வெற்றி (பரபோலா முறை)
மத்திய மாகாணம் எதிர் வட மாகாணம்
வெலிசரை கடற்படை மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மத்திய மாகாண அணி கஜித கொடுவெகொட பெற்றுக்கொண்ட 53 ஓட்டங்களின் உதவியுடன் 45.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களை குவித்தது.
இலகுவான இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய வட மாகாண அணி சார்பாக, சிறப்பாக துடுப்பாடிய சலித் பெர்னாண்டோ 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியமையினால், 39.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்று துரதிஷ்டவசமாக 6 ஓட்டங்களால் வெற்றியை தவறவிட்டது.
அதேநேரம் மத்திய மாகாண அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய விமுக்தி நெதுமல் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் திமிர சுபுன் மற்றும் ஜனிது ஹிம்சார ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
மத்திய மாகாணம் – 178 (45.4) – கஜித கொடுவெகொட 53, டியோன் ஸ்டௌட்டர் 30, ரவிஷ்க உபேந்திர 22, எஸ். மதுஷன் 4/21, கே. கபில்ராஜ் 2/45
வட மாகாணம் – 172 (39.1) – சலித் பெர்னாண்டோ 87, உமேஷ் லக்க்ஷான் 22, விமுக்தி நெதுமல் 4/48, திமிர சுபுன் 2/18, ஜனிது ஹிம்சார 2/23
முடிவு – மத்திய மாகாணம் 6 ஓட்டங்களால் வெற்றி
ஊவா மாகாணம் எதிர் வட மேல் மாகாணம்
கொழும்பு சோனகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் வட மேல் மாகாண அணி 7 விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஊவா மாகாண அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்தவகையில் களமிறங்கிய அவ்வணி நிபுன் தனஞ்சய மற்றும் புபுது கனேகம ஆகியோரின் அதிரடி பந்து வீச்சில் 38.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களுக்கு சுருண்டது.
நேர்த்தியாக பந்து வீசிய நிபுன் தனஞ்சய 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் புபுது கனேகம மற்றும் ஷெஷான் உதார ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதனை தொடர்ந்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய வட மேல் மாகாண அணி, 25.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அதிரடியாக துடுப்பாடிய சமித் டில்ஷான் ஊவா மாகாண அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து அதிகபட்ச ஓட்டங்களாக 74 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.
போட்டியின் சுருக்கம்
ஊவா மாகாணம் – 146 (38.5) – ஆதித்ய சிறிவர்தன 36, சிஹான் கலிந்து 32, நிபுன் தனஞ்சய 3/24, புபுது கனேகம 2/08, ஷெஷான் உதார 2/44
வட மேல் மாகாணம் – 148/3 (25.1) – சமித் டில்ஷான் 74, புபுது கனேகம 35, சஷிக துல்ஷான் 2/20
முடிவு – வட மேல் மாகாணம் 7 விக்கெட்டுகளால் வெற்றி
கிழக்கு மாகாணம் எதிர் வட மத்திய மாகாணம்
இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் கிழக்கு மாகாண அணியின் மோசமான துடுப்பாட்டத்தினால், வட மத்திய மாகாணம் 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.
கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வட மத்திய மாகாணம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கிழக்கு மாகாண அணி ஷெஹான் அவிந்த்ய மற்றும் தமித் சமரவிக்ரம ஆகியோரின் அதிரடி பந்து வீச்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 69 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிரடியாகப் பந்து வீசிய ஷெஹான் அவிந்த்ய 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து களமிறங்கிய வட மத்திய மாகாணம் 12 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து
போட்டியின் சுருக்கம்
கிழக்கு மாகாணம் – 69 (26) – ஷெஹான் அவிந்த்ய 3/08, தமித் சமரவிக்ரம 3/12
வட மத்திய மாகாணம் – 70/3 (12) – எம். ஷருஹான் 3/31
முடிவு – வட மத்திய மாகாணம் 7 விக்கெட்டுகளால் வெற்றி
புள்ளிகள் அட்டவணை
குழு A | Mat | Won | Lost | ND | TIE | BP | Points |
NRR |
|
வட மேல் மாகாணம் | 4 | 4 | 0 | 0 | 0 | 3 | 19 | 2.007 | |
மேல் மாகாணம் (தெற்கு) | 4 | 3 | 1 | 0 | 0 | 1 | 13 | 0.945 | |
மத்திய மாகாணம் | 4 | 2 | 2 | 0 | 0 | – | 8 | -0.586 | |
வட மாகாணம் | 4 | 1 | 3 | 0 | 0 | 1 | 5 | -0.680 | |
ஊவா மாகாணம் | 4 | 0 | 4 | 0 | 0 | – | 0 | -1.674 | |
குழு B | Mat | Won | Lost | ND | TIE | BP | Points | NRR | |
மேல் மாகாணம் (வடக்கு) | 4 | 4 | 0 | 0 | 0 | 2 | 18 | 2.071 | |
தென் மாகாணம் | 4 | 3 | 1 | 0 | 0 | 3 | 15 | 2.066 | |
மேல் மாகாணம் (மத்திய) | 4 | 2 | 2 | 0 | 0 | 2 | 10 | 0.461 | |
வட மத்திய மாகாணம் | 4 | 1 | 3 | 0 | 0 | – | 5 | -0.923 | |
கிழக்கு மாகாணம் | 4 | 0 | 4 | 0 | 0 | – | 0 | -3.873 |