இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (12) ஆரம்பமானது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன.
19 வயதின் கீழ் மாகாண கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்கள் விபரம்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஏற்பாடு செய்து நடாத்தும் 19 வயதின் கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு…
வட மாகாணம் எதிர் மேல் மாகாணம் வடக்கு
கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மேல் மாகாணம் வடக்கு அணிக்கு எதிரான போட்டியில் வட மாகாண அணி இறுதிவரை போராடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வட மாகாண அணி சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 47.3 ஓவர்கள் வரை துடுப்பெடுத்தாடியபோதும் சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்களையே பெற்றது. கொக்குவில் இந்துக் கல்லூரி வீரர் எஸ். பானுஜன் பெற்ற 23 ஓட்டங்களுமே அதிகமாகும்.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய மேல் மாகாண வடக்கு அணிக்கு, வடக்கின் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த முன்னணி வீரர்களைக் கொண்ட மேல் மாகாண வடக்கு வீரர்கள் ஒரு கட்டத்தில் தோல்வியை நெருங்கி வந்தனர்.
எனினும் புனித பெனடிக்ட் கல்லூரி வீரர் மஹேஷ் தீக்ஷன நிதானமாக ஆடி 30 ஓட்டங்களை பெற்று அணிக்கு கைகொடுத்தார். இதன்மூலம் மேல் மாகாண வடக்கு அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 123 ஓட்டங்களை எட்டியது.
பந்து வீச்சில் சென் ஜோன்ஸ் கல்லூரி வீரர் தினோசன் மற்றும் யாழ் மத்திய கல்லூரி வீரர் மதுஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
போட்டியின் சுருக்கம்
வட மாகாணம் – 122 (47.3) – எஸ். பானுஜன் 23, பசிந்து உஷேதி 3/12, பிரவீன் நிமேஷ் 2/11, மஹேஷ் தீக்ஷன 2/26
மேல் மாகாணம் வடக்கு – 123/9 (34.4) – மஹேஷ் தீக்ஷன 30, டீ. தினோசன் 2/19, எஸ். மதூஷன் 2/36
முடிவு – மேல் மாகாணம் வடக்கு 1 விக்கெட்டால் வெற்றி
பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை ‘A’ குழாம் அறிவிப்பு
பங்களாதேஷ் ‘A’ அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வமற்ற…
மத்திய மாகாணம் எதிர் வட மேல் மாகாணம்
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் வீரர் நிபுன் தனஞ்சயவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியோடு வடமேல் மாகாண அணி மத்திய மாகாணத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இலகுவாக வென்றது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் தனஞ்சய, பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை குவித்தார்.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மத்திய மாகாணம் முதலில் துப்பெடுத்தாட தீர்மானித்தது. எனினும் அந்த அணி 42.5 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. புபுது பண்டார அதிகபட்சம் 35 ஓட்டங்களை பெற்றார். இதன்போது அதிரடியாக பந்துவீசிய சிதும் அகலங்க மத்திய மாகாணத்தின் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்து நெருக்கடி கொடுத்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய வட மேல் மாகாண அணி 35.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மத்திரம் இழந்து எந்த நெருக்கடியும் இன்றி வெற்றி இலக்கான 151 ஓட்டங்களை எட்டியது.
போட்டியின் சுருக்கம்
மத்திய மாகாணம் – 150 (42.5) – புபுது பண்டார 35, அபிசேக் ஆனந்தகுமார் 31, சிதும் அகலங்க 4/37, நிபுன் தனஞ்சய 2/22, விதத் படகொல 2/35
வட மேல் மாகாணம் – 151/3 (35.1) – நிபுன் தனஞ்சய 51*, சுபுன் சுமனரத்ன 42, முதித் பிரேமதாச 25, யொஹான் பீரிஸ் 24*,
முடிவு – வட மேல் மாகாணம் 7 விக்கெட்டுகளால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க