கமிந்து மற்றும் அபிஷேக்கின் ஆபார ஆட்டத்தின்மூலம் சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதின் கீழான பாடசாலைகளுக்கு இடையிலான டிவிசன் 1 கிரிக்கெட் தொடரில் ரிஷ்மன்ட் கல்லூரி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுள்ளது.
குறித்த தொடரில் நேற்று ஆரம்பமான இரண்டு போட்டிகள் இன்று முடிவுற்றன.
மாத்தறை சென் சேவாசியஸ் கல்லூரி எதிர் காலி ரிச்மன்ட் கல்லூரி
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று காலை ஆரம்பமான இப்போட்டியில் காலி ரிச்மன்ட் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 115 ஓட்டங்களால் அபார வெற்றி ஈட்டியது.
மென்டிஸ் சகோதரர்களின் சிறப்பாட்டத்தால் வலுவான நிலையில் ரிச்மன்ட் கல்லூரி
சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான டிவிசன் 1 கிரிக்கெட் தொடரின் மேலும் 5 போட்டிகள் இன்று நடைபெற்றன……
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென் சேவாசியஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அவ்வணி தமது முதல் இன்னிங்சுக்காக 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணி சார்பாக ரிசிர லக்வின் 23 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் சந்துன் மென்டிஸ் 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், அம்சி டி சில்வா 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், தனஞ்சய லக்ஷான் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரிச்மன்ட் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 4 விக்கெட் இழப்பிற்கு 307 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது. அவ்வணி சார்பாக கமிந்து மென்டிஸ் 133 ஓட்டங்களையும், தவீஷ அபிஷேக் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும், ஆதித்ய சிரிவர்தன 32 ஓட்டங்களையும் அவிந்து தீக்சன ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் சுபுன் கவிந்த 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சென் சேவாசியஸ் கல்லூரி அணி தஞ்சய லக்ஷானின் அபாரப் பந்து வீச்சினால் 43 ஆவது ஓவரில் 105 ஓட்டங்களுக்கே தமது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது.
பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட தஞ்சய லக்ஷான் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைப் பதம் பார்த்தார்.
போட்டியின் சுருக்கம்
சென் சேவாசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 87/10 (47.3) ரிசிர லக்வின் 23. சந்துன் மென்டிஸ் 5/32, அம்சி டி சில்வா 2/15, தனஞ்சய லக்ஷான் 2/17
காலி ரிச்மன்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 307/4d (67) கமிந்து மென்டிஸ் 133, தவீஷ அபிஷேக் 100*, ஆதித்ய சிரிவர்தன 32, அவிந்து தீக்சன 25. சுபுன் கவிந்த 2/12
சென் சேவாசியஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 105/10 (42.3) சேதக தேனுவான் 21. தஞ்சய லக்ஷான் 4/25, சந்துன் மென்டிஸ் 2/12
முடிவு – காலி ரிச்மன்ட் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 115 ஓட்டங்களால் வெற்றி
புதிய ஒளியினைத் தேடி பாகிஸ்தானுடன் மோதும் இலங்கை அணி
எனினும் இலங்கையை விட மோசமான வரலாற்றினைக் கொண்ட கிரிக்கெட் அணிகள் இன்றைய நாட்களில் தடைகளை எல்லாம் உடைத்து சிறப்பாக செயற்பட்டு வருவது இலங்கை அணியும் எதிர்காலத்தில் மீண்டுவர முடியும் என்பதற்கு சிறந்த சான்றாகவே உள்ளது……..
காலி சென் அலோசியஸ் கல்லூரி எதிர் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி
அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிந்த போதும் முதல் இன்னிங்ஸில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் சென் ஆலோசியஸ் கல்லூரி வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை சென் அலோசியஸ் கல்லூரிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய சென் அலோசியஸ் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பில் ஹரீன் புத்தில 46 ஓட்டங்களையும் பசிந்து நாணயக்கார 32 ஓட்டங்களையும் கிம்ஹான அசிர்வத 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கே எம் ஹெட்டியாராச்சி 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்சினைத் தொடர்ந்த வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பந்து வீச்சில் சென் அலோசியஸ் கல்லூரி அணியின் ஹரீன் புத்தில 18 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சினைத் தொடர்ந்த புனித அந்தோனியார் கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 68 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அவ்வணி சார்பில் ஜயவீர 29 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் அலோசியஸ் அணியின் அசேன் பண்டார 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ரவீந்து சஞ்சன 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம
காலி சென் அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 217/10 (60.3) ஹரீன் புத்தில 46, பசிந்து நாணயக்கார 32, கிம்ஹான அசிர்வத 32, கே எம் ஹெட்டியாராச்சி 3/09
புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 55/10 (36.5) ஹரீன் புத்தில 6/18
சென் அந்தனிஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – ஜயவீர 29, அசேன் பண்டார 2/09, ரவீந்து சஞ்சன 2/26
முடிவு – போட்டி சமநிலையில் முடிவு. முதல் இன்னிங்ஸில் பெற்ற புள்ளிகளின் படி சென் அலோசியஸ் கல்லூரி வெற்றி