இசிபதனவின் வலுவுக்கு வித்திட்ட அசேன் குணவர்தன

220

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதின் கீழான பாடசாலைகளுக்கு இடையிலான பிரிவு 1 (டிவிசன் 1) கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகள் இன்று ஆரம்பமாகியதுடன் ஒரு போட்டி நிறைவை எட்டியது.

இசிபதன கல்லூரி எதிரி லும்பினி கல்லூரி

கொழும்பு BRC  மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இசிபதன கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவ்வணி தமது முதல் இன்னிங்சுக்காக 68 ஓவர்களில்  சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அசேன் குணவர்தன 84 ஓட்டங்களையும் இஷான் பெர்னாண்டோ 29 ஓட்டங்களையும் காலிக் அமத் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் விமுக்தி குலதுங்க 57 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன் கயசான் கருணாரத்ன வெறும் 8 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்ய வேண்டும் : அதபத்துவின் கருத்து

மார்வன் அதபத்து இலங்கை…

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லும்பினி கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 25 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 56 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

இசிபதான கல்லூரி 183/10 (68) அசேன் குணவர்தன 84, இஷான் பெர்னாண்டோ 29, காலிக் அமத் 30.  விமுக்தி குலதுங்க 4/57, கயசான் கருணாரத்ன 2/08

லும்பினி கல்லூரி – 56/4 (25) பூர்ண சந்தருவ 24


மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று  ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக இன்றைய ஆட்ட நேர முடியும்போது 11 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பந்து வீச்சில் தர்ஸ்டன் கல்லூரியின் நிபுன் லக்ஷான் 22  ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தப் போட்டிக்கு சீரற்ற காலநிலை பெரும் தடையாக இருந்தது.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 36/4 (11) நிபுன் லக்ஷான் 3/22


குருநாகல் மலியதேவ கல்லூரி எதிர் கொழும்பு டி எஸ் சேனாநாயக்க கல்லூரி

மலியதேவ கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற மலியதேவ கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவ்வணி, மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்படும் வரை  தமது முதல் இன்னிங்சுக்காக விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணியின் சுபுன் சுமனரத்ன ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் மலியதேவ கல்லூரி 40/0 (16) சுபுன் சுமனரத்ன 27*

74 ஓட்டங்களுக்கு சுருண்டது கம்பஹா பண்டாரநாயக கல்லூரி

சிங்கர் அனுசரணையில் நடைபெறும்…

கேகாலை புனித மரியார் கல்லூரி எதிர் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி

நேற்று கதிரான மைதானத்தில்  ஆரம்பமாகி இன்று நிறைவுற்ற இப்போட்டியில் கேகாலை புனித மரியார் கல்லூரி அணி 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

புனித மரியார் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து  109 ஓட்டங்களைப் பெற்றது. பண்டாரநாயக்க கல்லூரி அணி முதலாம் நாளிலேயே சகல விக்கெட்டுக்களையும் இழந்து  74 ஓட்டங்களைப் பெற்றனர். தொடர்ந்து தமது இரண்டாம் இன்னிங்சினைத் தொடர்ந்த புனித மரியார் கல்லூரி அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தொடர்ந்து தமது 2வது இன்னிங்சினைத் தொடர்ந்த  அவ்வணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக சுபுன் குமார 32 ஓட்டங்களையும் சச்சின் பொன்சேகா 22 ஓட்டங்களையும் பெற்றனர் . பந்து வீச்சில் பண்டாரநாயக்க கல்லூரி அணியின் தினுஷ்க இமேஷ்  6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் ஜனிது வத்சல 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஹசித திமால் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் அறோஷ மதுசான் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும்  கைப்பற்றினர்.

149 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பண்டாரநாயக்க கல்லூரி அணி 72 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பில் சயுரு ருஷேன் 25 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் புனித மரியார் கல்லூரியின் சுபுன் குமார 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித மரியார் கல்லூரி (1வது இன்னிங்ஸ்) – 109/10 (43.1) அகலங்க தினேஷ் 24, சுஜித் குமார 23. ஜனிது வத்சல 3/24, தினுஷ்க இமேஷ் 2/03, அறோஷ மதுசான் 2/14, ஹசித திமால் 2/19   

பண்டாரநாயக்க கல்லூரி (1வது இன்னிங்ஸ்) – 74/10 (29.3) ஜனிது வத்சல 42. சுபுன் குமார 4/22, அகலங்க தினேஷ் 2/06, சஜீவ ஜயமால் 2/19   

புனித மரியார் கல்லூரி (2 வது இன்னிங்க்ஸ்) – 114/10 (46.3) சுபுன் குமார 32, சச்சின் பொன்சேகா 22  தினுஷ்க இமேஷ் 2/06, ஜனிது வத்சல 3/30, ஹசித திமால் 3/46, அறோஷ மதுஷான் 2/21

பண்டாரநாயக்க கல்லூரி (2 வது இன்னிங்க்ஸ்) – 72/10 (29) சயுரு ருஷேன் 25. சுபுன் குமார 5/40, சஞ்சய ஜயமால் 3/15

முடிவு கேகாலை புனித மரியார் கல்லூரி 77 ஓட்டங்களால் வெற்றி