ஹேஷான் நெலிகவின் சகலதுறை ஆட்டத்தால் வலுப்பெற்ற மஹானாம கல்லூரி

215

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 2017/18 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் பிரிவு ஒன்றுக்கான (டிவிசன் 1) பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் 3 காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. இதில் மஹானாம மற்றும் தர்ஸ்டன் கல்லூரிகளுக்கிடையில் ஆரம்பமாகிய காலிறுதிப் போட்டியில் மஹானாம கல்லூரியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தர்ஸ்டன் கல்லூரியினர் தடுமாறி வருகின்றனர்.

மஹானாம கல்லூரி, கொழும்பு எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு

தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மஹானாம கல்லூரி, மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

சமநிலையில் முடிவடைந்த 18ஆவது ‘வீரர்களின் சமர்’

வடக்கின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளைக் கொண்ட பாடசாலைகளான யாழ். மகாஜனாக் கல்லூரி …

அவ்வணி சார்பாக ஹேஷான் நெலிக 40 ஓட்டங்களைப் பெற்று அவ்வணிக்கு வலுசேர்த்தாலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் தர்ஸ்டன் கல்லூரியின் சவான் பிரபாஷ் மற்றும் நிபுன் லக்ஷான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரியனர், 9 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியிருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக இன்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

துடுப்பாட்டத்தில் தனித்துப் போராடிய மஹானமா கல்லூரியின் ஹேஷான் நெலிக பந்து வீச்சிலும் சிறப்பாக செயற்பட்டு 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற, பெதும் பொதேஜு மற்றும் பியுமால் சந்தீப ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

மஹானாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 147/10 (58.4) – ஹேஷான் நெலிக 40, வத்சர பெரேரா 34, பவன் ரத்னாயக்க 28, சவான் பிரபாஷ் 3/16, நிபுன் லக்ஷான் 3/47, யேஷான் விக்ரமஆரச்சி 2/04

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 72/9 (22) – ஹேஷான் நெலிக 3/21, பெதும் பொதேஜு 2/24, பியுமால் சந்தீப 2/25  

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு

கந்தானை டி மெசெனட் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பெனடிக்ட் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை ஆனந்த கல்லூரிக்கு வழங்கியது.

மெதிவ்ஸின் மீள்வருகைக்காக காத்திருக்கும் தெரிவுக் குழு உறுப்பினர்கள்

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினர், உபாதைக்குள்ளாகியுள்ள இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளின்…

இதன்படி ஆனந்த கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றநிலையில் மழை குறுக்கிட முதல் நாள் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

அவ்வணிக்காக லஹிரு ஹிரன்ய 46 ஓட்டங்களை ஆட்டமிழக்காது அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 150/6 (41.3) – லஹிரு ஹிரன்ய 46*, அசேல் சிகேரா 29, கனிஷ்க ரன்திலககே 27, பிரித்வி ஜெகராஜசிங்கம் 3/30

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை எதிர் லும்பினி கல்லூரி, கொழும்பு

மொரட்டு மஹா வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மொரட்டு அணியினர், முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்து வரும் லசித் மாலிங்க

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான T20 தொடரின் 11 போட்டிகள்…

மொரட்டு கல்லூரிக்காக ஷெஹத நிதேந்திர 48 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் லும்பினி கல்லூரியின் பசிந்து நதுன் மற்றும் விமுக்தி குலதுங்க தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த லும்பினி கல்லூரியினர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

மொரட்டு மஹா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) 139/10 (39.4) –  ஷெஹத நிதேந்திர 48, நிஷான் மதுஷ்க 23, பசிந்து நதுன் 3/32, விமுக்தி குலதுங்க 3/38, பிரபாத் மதுஷங்க 2/19, அமித் தனஞ்சய 2/24

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 39/1 (6)ரன்மல் பெர்னாண்டோ 36*

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.