சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுத் தொடரின் மற்றுமொரு போட்டியில் மொறட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரியை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்திய காலி மஹிந்த கல்லூரி அணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற செபஸ்டியன் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய செபஸ்டியன் அணியினர் 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்களுக்கு சுருண்டனர். அவ்வணி சார்பாக நிஷித அபிலாஷ் 48 ஓட்டங்களையும், மலிந்த பீரிஸ் 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.
உள்ளூர் கழக ஒரு நாள் தொடரில் காலிறுதியில் மோதவுள்ள அணிகள்
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) நடாத்தும் 2017/2018 பருவகாலத்துக்கான பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட
பந்துவீச்சில் மஹிந்த கல்லூரி சார்பில் கவின் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் சுபானு ராஜபக்ஷ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 210 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மஹிந்த கல்லூரி அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பாக ஹன்சிக வெலிஹின்ன சதம் விளாசியதுடன், ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
போட்டியின் சுருக்கம்
புனித. செபஸ்டியன் கல்லூரி – 209/10 (49.2) – நிஷித அபிலாஷ; 48, மலின்த பீரிஸ் 40, தாஷிக் பெரேரா 37, தரூஷ பெர்னாண்டோ 21, கவின் 2/20, சுபானு ராஜபக்ஷ 2/34
மஹிந்த கல்லூரி – 212/3 (45.4) – ஹன்சிக வெலிஹின்ன 104*, கே.கே கவின் 46
முடிவு – காலி மஹிந்த கல்லூரி 7 விக்கெட்டுக்களால் வெற்றி
திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 2017/2018 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் பிரிவு ஒன்றுக்கான (டிவிசன் 1) பாடசாலைகளுக்கிடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியொன்று இன்று(20) ஆரம்பமாகியது.
திரித்துவக் கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரிகளுக்கிடையிலான இந்தப் போட்டி கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. இதன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி வீரர்கள் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தனர்.
இதன்படி அவர்கள் தமது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றனர். ஜெப் வீரசிங்க 62 ஓட்டங்களையும் திசரு ரஷ்மிக்க 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நாலந்த கல்லூரியின் கவீஷ் மதுரப்பெரும மற்றும் மதுஷான் ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
பின்னர் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவு நேரத்தில் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து கொழும்பு வீரர்கள் இன்றைய ஆட்ட நேர நிறைவின்போது 2 விக்கெட்டுக்களை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.
போட்டியின் சுருக்கம்
திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 267 (75.2) – ஜெப் வீரசிங்க 62, திசரு ரஷ்மிக்க 56, டிரெவோன் பெர்சிவல் 32, புபுது பண்டார 27, ஹசித்த போயகொட 22, மதுஷான் ஹசரங்க 3/53, கவீஷ் மதுரப்பெரும 3/56
நாலந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 21/2 (5.1)
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.