அஷேன் பண்டாரவின் அபார சதத்தால் அலோசியஸ் கல்லூரி வலுவான நிலையில்

146

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (11) ஆரம்பமாகின.

புனித அலோசியஸ் கல்லூரி, காலி எதிர் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு

அஷேன் பண்டாரவின் அபார சதத்தின் மூலம் டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு எதிராக புனித அலோசியஸ் கல்லூரி வலுவான நிலையை எட்டியுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித அலோசியஸ் கல்லூரிக்காக அஷேன் பண்டார 101 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்களை பெற்ற போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இலங்கை டெஸ்ட் அணியின் புதிய பயணம் ஒன்று ஆரம்பம் – ஹேரத்

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த டி.எஸ். சேனநாயக்க கல்லூரி 17 ஓட்டங்களை பெறுவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 283/7d (81.1) – அஷேன் பண்டார 101, கிம்ஹார ஆஷிர்வர்தன 39, ரவிந்து சஞ்சன் 28, நிலூஷ துல்மின 27, சந்தீப சமோத் 25, பசிந்து ஆதித்ய 2/28, முதித லக்ஷான் 2/62

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 17/4 (7.4) – நிலூஷ துல்மின 2/03


புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை எதிர் குருகுல கல்லூரி, களனி  

சூரியவெவ மஹிந்த ரஜபக்ஷ அரங்கில் ஆரம்பமான இப்போட்டியில் புனித செர்வதியஸ் கல்லூரியை முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்கு சுருட்டிய குருகுல கல்லூரி ஸ்திரமான நிலையில் உள்ளது.

பந்துவீச்சில் குருகுல கல்லூரியின் யுஷான் மலித் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த குருகுல கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித செர்வதியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 191 (61.4) – சேத்தக்க தெனுவன் 42, பசிந்து மனுப்ரிய 39, இசுரு உதயங்க 37, திலான் பிரஷான் 27, யுஷான் மலித் 4/24

குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்) – 116/3 (33.2) – கெமிர நயந்தர 36, லசிது அரோஷ 31  


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை

கம்பஹா கதிரான மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 172 ஓட்டங்களுக்கு சுருண்டபோதும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இலங்கைக்கு எதிரான T20 தொடரில் 7 மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள பங்களாதேஷ்

இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பாதியில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 98 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 172 (56.1) – மார்க் பெர்னாண்டோ 41, கெவின் பெரேரா 38, லசித் கிரூஸ்புள்ளே 21, ரொஷேன் பெர்னாண்டோ 21, கௌமல் நாணயக்கார 4/43, மதுக பெர்னாண்டோ 2/35, சவிந்து பீரிஸ் 2/58

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 98/7 (35.1) – அவிந்து பெர்னாண்டோ 20, சுவத் மெண்டிஸ் 18*, நவீன் பெர்னாண்டோ 3/30, பசிந்து உசெட்.டி 3/26

மூன்று போட்டிகளினதும் இரண்டாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்