சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (18) இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்தன.
புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் புனித செர்வஷியஸ் கல்லூரி, மாத்தறை
புனித செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் புனித செபஸ்டியன் கல்லூரி அணி, 9 விக்கெட்டுக்களால் இலகுவான முறையில் மாத்தறை புனித செர்வஷியஸ் கல்லூரியினை தோற்கடித்தது.
இன்னிங்ஸ் வெற்றிகளை பதிவு செய்த பேதுரு, தோமியர், நாலந்த கல்லூரி அணிகள்
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும்…
நேற்று (17) ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித செபஸ்டியன் கல்லூரி அணியினர் 220 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸில் பெற்றனர். செபஸ்டியன் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் தாஷிக் பெரேரா அதிகபட்ச ஓட்டங்களை (45) பதிவு செய்திருந்தார். இதேநேரம், செர்வஷியஸ் கல்லூரியின் பந்துவீச்சில் சேதக தெனுவன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய புனித செர்வஷியஸ் கல்லூரி 85 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. செர்வஷியஸ் கல்லூரியை குறைவான ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த உதவிய வினுஜ ரணசிங்க செபஸ்டியன் கல்லூரி பந்துவீச்சில் வெறும் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து புனித செர்வஷியஸ் கல்லூரி தமது முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் இரண்டாம் இன்னிங்சுக்காக மீண்டும் துடுப்பாடியது. இம்முறை 139 ஓட்டங்களுடன் சுருண்ட செர்வஷியஸ் கல்லூரி போட்டியின் வெற்றி இலக்காக 5 ஓட்டங்களை மாத்திரம் செபஸ்டியன் கல்லூரி வீரர்களுக்கு நிர்ணயித்தது. செபஸ்டியன் கல்லூரிக்காக மீண்டும் பந்துவீச்சில் அசத்திய வினுஜ ரணசிங்க மீண்டும் 4 விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தார்.
இதன் பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 5 ஓட்டங்களை அடைய இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பாடிய செபஸ்டியன் கல்லூரி அணி ஒரு விக்கெட்டினை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 220 (48.2) – தாஷிக் பெரேரா 45, சேதக தெனுவன் 4/59
புனித செர்வஷியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 85 (31.3) – கேஷர நுவன்த 31, வினுஜ ரணசிங்க 4/12
புனித செர்வஷியஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 139 (66.4) – கேசர நுவன்த 50, வினுஜ ரணசிங்க 4/42
புனித செபஸ்டியன் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 5/1 (0.5)
முடிவு – புனித செபஸ்டியன் கல்லூரி 9 விக்கெட்டுக்களால் வெற்றி
தர்மராஜ கல்லூரி, கண்டி எதிர் புனித அலோசியஸ் கல்லூரி, காலி
கண்டி தர்மராஜ கல்லூரியின் சொந்த மைதானத்தில் இன்று முடிவுக்கு வந்த தர்மராஜ கல்லூரி மற்றும் காலி அலோசியஸ் கல்லூரிகள் இடையிலான இந்த ஆட்டம் சமநிலை அடைந்தது.
நேற்று ஆரம்பித்திருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய தர்மராஜ கல்லூரி வீரர்கள் அலோசியஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் தமது முதல் இன்னிங்ஸில் 134 ஓட்டங்களையே பெற்றனர். அலோசியஸ் கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக நிதுக்க சமரசேகர மற்றும் சந்துன் மதுஷங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
18 வருடங்களின் பின் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக கண்டி – பல்லேகலை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில்…
பின்னர், தம்முடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய அலோசியஸ் கல்லூரி 168 ஓட்டங்களை குவித்தது. அலோசியஸ் கல்லூரி துடுப்பாட்டத்தில் கவிந்து தில்ஹார அரைச்சதம் (51) விளாச மறுமுனையில் சஹான் சிறிவர்தன தர்மராஜ கல்லூரிக்காக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
தொடர்ந்து, 34 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய தர்மராஜ கல்லூரி 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது ஆட்டத்தின் இரண்டாம் நாள் நிறைவுக்கு வந்தது. இதனால் போட்டியும் சமநிலை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 134 (55.3) – மிதில கயஷான் 35, நிதுக்க சமரசேகர 3/28, சதுன் மதுஷங்க 3/40
புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 168 (60.3) – ரவிந்து காஞ்சன 44, கவிந்து தில்ஹார 51, சஹான் சிறிவர்த்தன 5/37
புனித அலோசியஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 54/2 (14)
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<