முதல் பாதி அபாரத்தினால் ஹமீட் அல் ஹுஸைனியை வீழ்த்திய கிண்ணியா மத்தி

529

கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரிக்கு எதிராக இடம்பெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பிரிவு ஒன்று பாடசாலைகள் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளது. 

ராஜகிரிய சந்த்ர சில்வா மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி, இந்த பருவகாலத்தில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டியாக அமைந்தது.

தடுமாற்றம் கண்ட புனித பேதுரு கல்லூரியை வென்றது கிண்ணியா அல் அக்ஸா

கொழும்பு, புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பிரிவு ஒன்று பாடசாலைகள்…

ஆட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் நிமிடமே ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கிண்ணியா மத்திய கல்லூரி வீரர்கள் உதைந்த பந்தை தடுப்பதற்கு கோல் காப்பாளர் நுஸ்கான் முன்னே வரும்பொழுது கீழே விழுந்தார். இதன்போது பந்து அவரையும் தாண்டி கோல் கம்பம் நோக்கி செல்லும்போது கிண்ணியா வீரர் ரிப்கான் அஹமட் வேகமாக வந்து பந்தை கோலுக்குள் செலுத்தி ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்தும் சிறப்பான பந்துப் பரிமாற்றங்கள் மூலம் ஆட்டத்தில் கிண்ணியா வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அது போன்றே ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களின் முன்கள வீரர்களை தமது பகுதிக்கு முன்னேறி வர விடாமல் அவர்கள் தடுத்தனர்.

அதன் பயனாக அவ்வணிக்கு போட்டியின் 17ஆவது நிமிடத்தில் அடுத்த கோல் கிடைத்தது. ஹமீட் அல் ஹுஸைனி அணியின் பின்கள வீரர்களின் தடுப்பின்போது தன்னிடம் வந்த பந்தை அஹ்சன் பெனால்டி எல்லையில் இருந்து கோல் நோக்கி வேகமாக உதைந்து கம்பங்களுக்குள் செலுத்தினார்.

தொடர்ந்து 23ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து கிண்ணியா வீரர்கள் பெற்ற ப்ரீ கிக்கை சிபாஸ் கோல் நோக்கி தலையால் அடித்தார். எனினும் அதனை ஹமீட் அல் ஹுஸைனி கோல் காப்பாளர் நுஸ்கான் இலகுவாக தன்னகப்படுத்தினார்.

போட்டியின் 30 நிமிடங்கள் கடந்த நிலையில், கிண்ணியா மத்திய கல்லூரியின் கோல் நோக்கி ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் அடித்த பந்து பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டு மீண்டும் அவ்வணியின் சுல்பரிடம் வந்தது. அவர் வேகமாக கோல் நோக்கி அடித்த பந்தை கிண்ணியா கோல் காப்பாளர் முர்ஷித் பாய்ந்து சிறந்த முறையில் பிடித்துக்கொண்டார்.

முதல் பாதி நிறைவடைய சில நிமிடங்கள் இருக்கும்பொழுது கிண்ணியா மத்திய கல்லூரி வீரர்கள் எதிரணியின் கோல் நோக்கி பந்தை செலுத்தியபோது, ஹமீட் அல் ஹுஸைனியின் கோல் காப்பாளர் மற்றும் பின்கள வீரர்கள் தவறான முறையில் பந்தை தடுக்க முயற்பட்டனர். இதன்போது மீண்டும் தன்னிடம் வந்த பந்தை ரிப்கான் அஹமட் கோல் நோக்கி உதைந்தார். எனினும் கொழும்பு தரப்பின் பின்கள வீரரால் பந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.

முதல்: பாதி கிண்ணியா மத்திய கல்லூரி 2 – 0 ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி

இரண்டாம் பாதி ஆரம்பமாகி முதல் நிமிடத்திலேயே ஹமீட் அல் ஹுஸைனி அணியின் முன்கள வீரர்களால் அடிக்கப்பட்ட பந்தை கிண்ணியா மத்தியின் கோல் காப்பாளர் முர்ஷித் இலகுவாகப் பிடித்துக்கொண்டார்.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 9 நிமிடங்களில் மத்திய களத்தில் கொழும்பு வீரர் சஹனிடமிருந்து பந்தைப் பெற்ற குர்ஷித் பின்கள வீரர்களைத் தாண்டி முன்னோக்கிச் வென்று, தடுப்புக்கு வந்த வீரர்களிடமிருந்து தன்னைத் தனிப்படுத்தி பந்தை கோலுக்குள் செலுத்தி, தமது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

உலகக் கிண்ணத்தில் எதிர்பார்க்கப்படும் 10 வீரர்கள்

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FIFA) மிகப் பெரிய மோதலான உலகக் கிண்ணப் போட்டித்…

பின்னர் ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் எதிரணியின் கோல் திசைக்குள் செலுத்திய பந்து, பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டது. மீண்டும் அதனை ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் கோல் நோக்கி உதைய, பந்து கிண்ணியா பின்கள வீரர்களின் உடம்பில் பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.

மீண்டும் எதிரணியின் கோல் எல்லையின் ஒரு திசையில் பந்தைப் பெற்ற ஹமீட் அல் ஹுஸைனி அணியின் தலைவர் சஹன் பின்கள வீரர்கள் பலரைத் தாண்டி பந்தை எடுத்து வந்து சக வீரர்களுக்கு பரிமாற்றம் செய்தார். எனினும் ஏனைய வீரர்கள் அதனை சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறினர்.

மீண்டும் போட்டி நிறைவடையும் இறுதித் தருவாயில் முன்களத்தின் வலது புறத்தில் இருந்து பந்தைப் பெற்ற சஹன் எதிரணியின் பின்கள வீரர்களை தாண்டி கோல் எல்லைக்கு சென்று மற்றொரு வீரருக்கு பந்தைக் கொடுத்தார். அவர் கோல் நோக்கி அடித்த பந்தை முர்ஷித் சிறந்த முறையில் பாய்ந்து தட்டிப் பிடித்தார்.

அந்த முயற்சியே போட்டியின் இறுதி முயற்சியாய் அமைந்தது. எனவே, தமது முதல் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற கிண்ணியா வீரர்கள் தொடரை அபாரமான முறையில் ஆரம்பித்துள்ளனது.

உலகக் கிண்ணத்தின் வரலாற்றுக் கதை

பிஃபா என்ற வார்த்தையைத் தெரியாத விளையாட்டு ஆர்வளர்கள் இன்று இருக்கின்றனர்…

ஏற்கனவே கடந்த வாரம் இடம்பெற்ற புனித பேதுரு கல்லூரிக்கு எதிரான போட்டியில், கிண்ணியாவின் மற்றொரு அணியான அல் அக்ஸா கல்லூரி வீரர்கள் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். எனவே, இன்றைய போட்டியின் முடிவும் கொழும்பு அணிகளுக்கு பெரிதும் அதிர்ச்சி கொடுக்கும் ஒரு முடிவாக உள்ளது.

முழு நேரம்: பாதி கிண்ணியா மத்திய கல்லூரி 2 – 1 ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி

ThePapare.com

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் –  மொஹமட் சஹன் (ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி)

 கோல் பெற்றவர்கள்

ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி –  M குர்ஷித் 55′

கிண்ணியா மத்திய கல்லூரி – ரிப்கான் அஹமட் 1′, M அஹ்சன் 17′

மஞ்சள் அட்டைகள்

ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி – சுல்பர் 15′, சப்ரான் 70′

கிண்ணியா மத்திய கல்லூரி – ரிப்கான் அஹமட் 28′, M அஹ்சன் 31′

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க