இலங்கை கனிஷ்ட கால்பந்து அணிக்கு மோசமான தோல்வி

486
Bangladesh Football Federation

இந்தியாவில் இடம்பெறும் 15 வயதுக்கு கீழ்பட்ட தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி இன்று (25) பங்கேற்ற தமது மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் 7-1 என மோசமான தோல்வியை சந்தித்தது. 

முதல் பாதியில் போராடிய இலங்கை நேபாளத்திடம் வீழ்ந்தது

தற்போது நடைபெற்று வரும் 15 வயதின்கீழ்……………

இந்தியாவின் கல்யானி அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் நிமிடத்திலேயே கோல் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு பங்களாதேஷ் அணி முயற்சித்ததோடு அதனை வெற்றிகரமான முறியடிப்பதற்கு இலங்கை பின்கள வீரர்களால் முடிந்தது. போட்டியின் முதல் ஒரு சில நிமிடங்களில் பந்து முழுமையாக பங்களாதேஷ் கட்டுப்பாட்டில் இருந்ததோடு அந்த அணி முதல் 11 நிமிடங்களுக்குள் 5 கோல் முயற்சிகளில் ஈடுபட்டது

பங்களாதேஷ் அணி சிறப்பாக பந்தை கட்டுப்படுத்தி விளையாடி இலங்கை பின்கள வீரர்களுக்கு கடும் சவால் கொடுத்தது. இலங்கை அணியும் கோல் பெறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவைகளை கோலாக மாற்ற முடியாமல் போனது. போட்டியின் 32 ஆவது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையை ஆரம்பிப்பதற்கு பங்களாதேஷ் அணியினால் முடியுமானதோடு முதல் கோலை அவ்வணியின் அல் அமீன் ரஹ்மான் பெற்றார்.

முதல் பாதி முடிவுறுவதற்கு முன்னர் மற்றொரு கோலை பெறுவதற்கு பங்களாதேஷ் அணி பல தடவைகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகளை தடுப்பதற்கு இலங்கை அணியினால் முடியுமானது

எவ்வாறாயினும் பல முயற்சிகளின் பின் 42 ஆவது நிமிடத்தில் அடுத்த கோலை மொஹமட் இஸ்லாம் புகுத்தியதன் மூலம் பங்களாதேஷ் அணி 2-0 என முன்னிலை பெற்றது.     

சலாஹ்வின் இரட்டை கோல் மூலம் வெற்றியை சுவைத்த லிவர்பூல்

முஹமது சலாஹ்வின் இரட்டை கோல் மூலம்…………

இரண்டாவது கோலை பெற்று இரண்டு நிமிடங்களுக்குள் மூன்றாவது கோலையும் பெறுவதற்கு பங்களாதேஷால் முடிந்தது. அந்த கோலையும் அல் அமீன் ரஹ்மான் பெற்று தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். 

இதன்படி முதல் பாதி ஆட்டம் முடிவுறும்போது பங்களாதேஷ் அணி 3-0 என முன்னிலை பெற்றது.  

முதல் பாதி: பங்களாதேஷ் 3 – 0 இலங்கை 

இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இலங்கை அணியின் முன்கள வீரர் தாருக்க அஷாந்தவுக்காக மொஹமட் இஹ்சான் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார். எனினும் இரண்டாவது பாதியிலும் பங்களாதேஷ் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்து இரண்டு நிமிடங்கள் செல்வதற்குள் தமது நான்காவது கோலை புகுத்துவதற்கு பங்களாதேஷ் அணியினால் முடியுமானது. அந்த கோலை அல் மிராத் பெற்றார்.  

நான்கு கோல்களால் பங்களாதேஷ் அணி போட்டியில் முன்னிலை பெற்றிருந்த வேளை இலங்கை அணிக்கு நம்பிக்கை தருவதற்கு மொஹமட் மிஹ்ரானினால் முடிந்தது. 50 ஆவது நிமிடத்தில் இலங்கை அணிக்காக முதலாவது கோலை அவர் பெற்றுக் கொடுத்தார். 

மிஹ்ரானின் அபார கோல்களினால் பூட்டானை வீழ்த்தியது இலங்கை

இரண்டாம் பாதியில் காண்பித்த அபார………….

எனினும், பங்களாதேஷ் அணியின் கோல் மழை இத்துடன் முடியவில்லை. 59ஆவது நிமிடத்தில் பங்களாதேஷின் கோல் முயற்சியை இலங்கை அணியால் தடுக்க முடிந்தபோதும் அந்த நிமிடத்திலேயே பங்களாதேஷால் தனது ஐந்தாவது கோலை பெற முடிந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கோலை பெற்ற அல் அமீன் தனது ஹட்ரிக் கோலை பதிவு செய்து கொண்டார்.  

இறுதி நிமிடங்களில் இலங்கை அணியின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து பங்களாதேஷ் கனிஷ்ட வீரர்கள் தொடர்ந்து கோல் புகுத்தினர். 67 ஆவது நிமிடத்தில் கொலம் ரபீ பங்களாதேஷுக்காக ஆறாவது கோலை போட்டதோடு அதற்குப் பின் 71 ஆவது நிமிடத்தில் அல் அமீன் மற்றொரு கோலை பெற்றார்.  

இலங்கை அணி பல மாற்றங்களை செய்து மற்றொரு கோலை பெறுவதற்கு முயற்சித்தபோதும் அவை பங்களாதேஷ் பின்கள வீரர்கள் முன் வெற்றி அளிக்கவில்லை

முழு நேரம்: பங்களாதேஷ் 7 – 1 இலங்கை 

இலங்கை அணி தற்போது இந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் பங்கேற்றிருப்பதோடு அதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இலங்கை கனிஷ்ட அணி அடுத்து வரும் 27 ஆம் திகதி இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<