சமபோஷ நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான 14 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து சம்பியன் கிண்ண தொடரின் பொலன்னறுவை மாவட்ட சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டியில் பொலன்னறுவை கல்லெல்ல அல் அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலய அணியை வீழ்த்திய பொலன்னறுவை ரோயல் கல்லூரி மாவட்ட சம்பியன்களாக முடிசூடிக் கொண்டதுடன் தேசிய மட்டப் போட்டிகளுக்கும் தகுதி பெற்றது.
இப்போட்டித் தொடர் பொலன்னறுவை பெந்திவெவ மகா வித்தியாலய கல்லூரி மைதானத்தில் கடந்த 2 நாட்களாக (24ஆம், 25ஆம் திகதி) நடைபெற்றது. பொலன்னறுவை மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகள் பல கலந்து கொண்ட இப்போட்டித் தொடரின் முதல் சுற்று லீக் முறையில் இடம்பெற்றது.
FIFA இளையோர் உலகக் கிண்ண அரையிறுதி மோதல்கள் நாளை
இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வயதுக்கு உட்பட்ட FIFA உலகக் கிண்ண கால்பந்து…
குழுநிலைப் போட்டிகளின் முடிவின்படி பொலன்னறுவை ரோயல் கல்லூரி, பெந்திவெவ மகா வித்தியாலயம், மெதிரிகிரிய தேசிய பாடசாலை மற்றும் கல்லெல்ல அல் அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
முதல் நாளின் (24) இறுதிப் போட்டியாக நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் அல் அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயமும் மெதிரிகிரிய தேசிய பாடசாலையும் பலப்பரீட்சை நடாத்தின. இதில் அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் வீரர்களின் சிறப்பான விளையாட்டின் மூலம் 3 – 0 எனும் கோல்கள் கணக்கில் மெதிரிகிரிய தேசிய பாடசாலையை வீழ்த்தி அவ்வணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அதனைத் தொடர்ந்து இறுதி நாள் (25) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பெந்திவேவ மத்திய மகா வித்தியாலயத்தினை 2-0 எனும் கோல்கள் கணக்கில் வீழ்த்திய பொலன்னறுவை ரோயல் கல்லூரி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதன்படி இறுதிப் போட்டியில் பொலன்னறுவை கல்லெல்ல அல் அஸ்ஹர் மற்றும் பொலன்னறுவை ரோயல் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. போட்டியின் முதல் பாதியிலேயே அல் அஸ்ஹர் வீரர் திக்சன் முதலாவது கோலினை பெற்றுக்கொடுத்த போதிலும் சுதாகரித்துக்கொண்ட ரோயல் கல்லூரி அடுத்த 5ஆவது நிமிடத்தில் தமது முதல் கோலினைப் பெற்று ஆட்டத்தை சமநிலைப்படுத்தியது.
அmதன் பின்னரும் தமக்குக் கிடைத்த பெனால்டியையும் பயன்படுத்திய ரோயல் கல்லூரி வீரர்கள் தமது 2ஆவது கோலினையும் பெற்று ஆட்டத்தில் முன்னிலை பெற்றனர்.
தொடர்ந்தும் இரு தரப்பினராலும் தமக்கான அடுத்த கோலுக்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போதும், அவை பலன் கொடுக்கவில்லை.
குறிப்பாக, அல் அஸ்ஹர் கல்லூரியின் முயற்சிகள் யாவும் வீணாக, இறுதியில் பொலன்னறுவை ரோயல் கல்லூரி 2-1 எனும் கணக்கில் வெற்றி பெற்று மாவட்ட சம்பியனாகியதுடன், தேசிய மட்டப் போட்டிகளுக்கும் தெரிவாகியது.