குஜராத் தலைமைப் பயிற்சியாளராக தொடர்ந்தும் நெஹ்ரா நீடிப்பாரா?

27

குஜராத் டைடன்ஸ் அணியானது அடுத்த பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரிற்கு முன்னர் தமது பயிற்சியாளர் குழாத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும் என நம்பப்படுகின்றது.  

>>பிரவீன் ஜயவிக்ரம மீது ICC இன் ஊழல் தடுப்பு பிரிவு குற்றச்சாட்டு

அடுத்த பருவத்திற்கான IPL தொடரிற்கு முன்னர் மெகா வீரர்கள் ஏலம் (Mega Players Auction) நடைபெறவிருக்கின்றது. இந்த நிலையிலையே ஆஷிஷ் நெஹ்ரா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழாத்தில் மாற்றங்கள் இடம்பெறலாம் என நம்பப்படுகின்றது. இதனால் குஜராத் டைடன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா நீடிப்பதிலும் சந்தேகம் நிலவுகின்றது.

அத்துடன் ஆஷிஷ் நெஹ்ரா மாத்திரமின்றி பயிற்சியாளர்கள் குழாத்தில் மாற்றங்கள் இடம்பெறவிருப்பதனால் குஜராத் டைடன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மற்றும் Mentor ஆக செயற்படும் கேரி கிஸ்டன் மற்றும் கிரிக்கெட் விடயங்களுக்கான பணிப்பாளராக (Cricket Director) செயற்படும் விக்ரம் சோலன்கி ஆகியோரும் தங்களது பதவிகளில் நீடிப்பதில் சந்தேகம் நிலவுகின்றது.

இதேவேளை வெளியாகியிருக்கும் ஏனைய தகவல்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக குமார் சங்கக்கார மாறுவார் எனக் குறிப்பிடுகின்றன. எனவே இது நடைபெறும் சந்தர்ப்பத்தில் IPL அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் பயிற்சியாளர் வெற்றிடம் ஏற்பட முடியும்.

எனவே இந்த பயிற்சியாளர் வெற்றிடத்தினை நிரப்பும் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் ட்ராவிட் இருப்பார் என நம்பப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<