இலங்கை – இந்தோனேசிய நட்புறவு ரக்பி செவன்ஸ் போட்டியில் இலங்கை லயன்ஸ் அணி வெற்றி பெற்றதோடு, கழக செவன்ஸ் ரக்பி சம்பியன்களான இராணுவப்படை விளையாட்டு கழகம் மகளிருக்கான பிரிவில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த போட்டிகள் CR&FC மைதானத்தில் நேற்று (13) மாலை முடிவுற்றன.
Photos: Indonesia tour of Sri Lanka – Day 1
ThePapare.com | Suseth Wijesiriwardena | 12/05/2018 Editing and re-using images without permission of ThePapare.com …
இந்த ஆண்டு இறுதியில் இந்தோனேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளை ஒட்டி அனுபவம் மற்றும் திறமையை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்தோனேசிய ஆடவர் மற்றும் மகளிர் ரக்பி அணிகள் இலங்கை வந்துள்ளன. இந்தோனேசியா இந்த விளையாட்டுப் போட்டியை நடத்தும் நாடு என்பதால் அது தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்காமலேயே தொடருக்கு தேர்வாகியுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் மகளிர் பிரிவில் இராணுவப்படை கழகம் 24–05 புள்ளிகளில் விமானப்படையை வீழ்த்தியதோடு, CR&FC க்கு எதிரான போட்டியில் இந்தோனேசிய மகளிர் அணி 17–05 என வென்றது.
ஆடவர் பிரிவில் இலங்கை லயன்ஸ் 52–00 என்ற புள்ளிகளில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை முழுமையாக வீழ்த்தியதோடு, முதல் நாளில் ஆடிய இலங்கை ரக்பி அணி இரண்டாவது நாளில் வராததால் ஆடவர் பிரிவு போட்டிகளை மூன்று அணிகளோடு தொடர வேண்டி ஏற்பட்டது.
இந்நிலையில் இலங்கை இராணுவப்படை அணி, மகளிர் பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, CR&FC அணியை 41–00 என வென்றதோடு இந்தோனேசிய மகளிர் அணியை 29–00 என வீழ்த்தி மகளிர் பிரிவில் தொடரை வென்றது. இதனிடையே ஆரம்ப போட்டியில் தோல்வியுற்ற விமானப்படை தமது திறமையை வெளிப்படுத்தி CR&FC அணியை 40–00 எனவும், இந்தோனேசிய பெண்களை 17–07 எனவும் வென்றது.
உலகக் கிண்ண ஹொக்கி தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி
ஸ்பெய்னின் பார்சிலோனாவில் எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி வரை ….
இதேவேளை, சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தோனேசிய அணி இளம் CR&FC அணியை 17–05 என்ற புள்ளிகளில் வென்றது.
ஆடவர் பிரிவில் பொலிஸ் விளையாட்டுக் கழகம் நெருக்கமான போட்டிக்கு பின் இந்தோனேசிய அணியிடம் 12–07 என தோல்வி அடைந்தது. தினத்தின் கடைசி போட்டியாக இலங்கை லயன்ஸ் மற்றும் இந்தோனேசிய அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
இதில் இலங்கை லயன்ஸ் 38–00 என்ற புள்ளிகளால் இந்தோனேசியாவை முழுமையாக வீழ்த்தியது. இந்தோனேசிய பாதுகாப்பு அரணை முறியடித்து வேகமாக ஓடி ஒமல்க குணரத்ன புள்ளிகளை பெற ஆரம்பித்தார். சாமுவேல் மதுவன்த மிக விரைவான இடைவெளியில் இரண்டு ட்ரைகளை பெற பாதி நேரம் முடிவின்போது 17-00 என இலங்கை லயன்ஸ் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் ரையான் சில்வா, நவீன் ஹேனகன்கானம்கே மற்றும் புத்திம பிரியரத்ன பெற்ற ட்ரைகள் மூலம் இலங்கை லயன்ஸ் புள்ளிகளை அதிகரித்து மொத்தம் 38 புள்ளிகளுடன் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் தோல்வியுறாத அணியாக இலங்கை லயன்ஸ் ஆடவர் சம்பியன் பட்டத்தை வென்றது.
Photo Album: Indonesia tour of Sri Lanka – Day 2
Photo Album of Indonesia tour of Sri Lanka – Day 2
இந்தோனேசிய ஆடவர் அணி தலைவர் நன்தா செப்டியன் ஒலெவன் இந்த நட்புறவு போட்டி தொடர்பில் கூறும்போது, ‘இலங்கையில் நாம் அதிகம் கற்றுக்கொண்டதோடு வலுவான ஒரு இலங்கை அணியுடன் ஆடியது எமக்கு அதிக அனுபவத்தை பெற்றுத் தந்தது. இந்த போட்டிகள் எமது திறமையை மற்றும் போட்டியின்போது எமது தொடர்பாடலை அதிகரிக்க உதவியதோடு நாம் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டோம்‘ என்றார்.
இலங்கைக்கான இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம் பற்றி இந்தோனேசிய தலைமை பயிற்சியாளர் ஜோர்ஜ் வில்சன் கருத்து வெளியிடும்போது, ‘இந்தோனேசியா தொடர்ந்தும் தனது ரக்பியை மேம்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஆசியாவில் செவன்ஸ் போட்டியில் பலம்கொண்ட நாட்டுடன் ஆடுவதன் மூலம் எமது வீரர்களின் திறமையை மேலும் வெளிக்கொணர முடியுமாக உள்ளது. உஸ்பகிஸ்தானில் நாம் பலம்மிக்க மற்றும் உறுதியான அணிகளுடன் ஆடியது போன்று நாம் வித்தியாசமான பாணியிலான ரக்பியில் ஆட விரும்புகிறோம். இங்கே நாம் வேகமான திறந்த ‘ஓப்லோடிங்‘ (Offloading) பாணியிலான ரக்பியை ஆட விரும்பினோம். ஆசிய விளையாட்டு போட்டிகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில் எமது வீரர் மற்றும் வீராங்கனைகள் வித்தியாசமான பாணியிலான ரக்பி ஆட்டத்தின் அதிக அனுபவத்தை பெற்றனர்‘ என்றார்.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க