மேயர் கிண்ண கலப்பு வலைப்பந்தாட்ட தொடரில் 41-37 புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற இராணுவ விளையாட்டு கழக அணி தோல்வியுறாத அணியாக சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது.
இராணுவ விளையாட்டு கழக அணியின் முதன்மை வீரரான பாரத ரணதுங்கவின் அற்புதமான கோலிடும் திறமையின் மூலமாக இந்த வெற்றியை இராணுவ விளையாட்டு கழக அணி தமதாக்கிக்கொண்டுள்ளது.
உலக ஸ்னூக்கர் போட்டியில் இலங்கையின் மொஹமட் இர்ஷாத்
கேகாலை வித்யாலையன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதல் காற்பகுதியில் இரண்டு அணிகளும் சம பலமான ஆட்டத்தை வெளிக்காட்டின. இதன்காரணமாக முதல் காற்பகுதி 11-11 என சமனிலையாகியது.
இரண்டாவது கால் பகுதியில் இராணுவ விளையாட்டு கழகம் முன்னிலையை பெற ஆரம்பித்தது. அதன்படி மேலும் 12 புள்ளிகளை பெற்று 23 புள்ளிகளை பெற, கேகாலை வித்யாலையன்ஸ் அணி 8 புள்ளிகளை மாத்திரம் பெற்று 19 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.
பின்னர் நடைபெற்ற மூன்றாவது கால் பகுதியில் வித்யாலையன்ஸ் அணி கடுமையான போட்டியை கொடுத்து 10 புள்ளிகளை பெற, இராணுவ அணி 8 புள்ளிகளை மாத்திரம் பெற்றது. எனினும், இராணுவ அணி 31-29 என இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையை பெற்றுக்கொண்டது.
இறுதியாக நடைபெற்ற போட்டியை தீர்மானிக்கக்கூடிய நான்காவது கால் பகுதியில் இராணுவ அணி 10 புள்ளிகளை பெற்றுக்கொண்டு வெற்றியை உறுதிசெய்ததுடன், வித்யாலையன்ஸ் அணி 8 புள்ளிகளை மாத்திரம் பெற்று 37-41 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
தொடர் முழுவதும் இராணுவ அணிக்காக அபாரமாக விளையாடிய பாரத ரணதுங்க, சிறந்த வீரராக தெரிசெய்யப்பட்டதுடன், தொடரின் மூன்றாவது இடத்தை இரத்தினபுரி அணியை வீழ்த்திய கடற்படை அணி பெற்றுக்கொண்டது.
இதேவேளை தொடரின் முதல் இடத்தை பிடித்துக்கொண்ட அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசாக வழங்கப்பட்டதுடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே 50 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணப்பரிசாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<