ஆப்கானிஸ்தான் தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர் இம்மாதம் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையின் தோல்வியை ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா
இந்தப்போட்டித் தொடருக்காக அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த நிலையில், அவருடைய ஒப்பந்தக்கால நிறைவுடன் பதவிலியிருந்து வெளியேறியிருந்தார். இந்தநிலையில் அதே அணிக்கு எதிராக தற்போது பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.
உமர் குல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக அப்துல் ரெஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் உள்ளூர் போட்டிகளில் அனுபவமிக்க பயிற்றுவிப்பாளரான இவர், பதவியிலிருந்து விலகிய மொஹமட் யூசுப்பிற்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மொஹமட் யூசுப் கடந்த டிசம்பர் மாதம் பதவிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மிக்கி ஆர்தர் மீண்டும் பயிற்றுவிப்பாளராக அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறித்த விடயம் இதுவரையில் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<