பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் மீது அந்நாட்டு கிரிக்கெட் சபை (PCB) ஊழல் தொடர்பிலான குற்றச்சாட்டினை முன்வைத்து குற்றவாளி எனத் தெரிவித்துள்ளது.
வெளியாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் உமர் அக்மல், சூதாட்ட விடயங்கள் தொடர்பிலான முழுமையான தகவல்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் பிரிவிடம் தெரிவிக்க மறுத்தமை தொடர்பில் இரண்டு பிரிவுகளில் குற்றவாளியாக இனங்காணப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இலங்கையர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் அறிவுரை
முழு இலங்கையினையும் கொரோனா…..
பொதுவாகவே, ஒழுக்கம் தொடர்பான விடயங்களில் தவறிழைத்து தனது நாட்டு கிரிக்கெட் சபையின் தண்டனைகளை அடிக்கடி சந்திக்கும் உமர் அக்மல், தற்போது இனங்காணப்பட்டிருக்கும் குற்றங்கள் நிரூபணம் ஆகும் சந்தர்ப்பத்தில் ஆறு மாதங்களுக்கோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடையினைப் பெற்றுக் கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னரும் சூதாட்ட விடயங்கள் தொடர்பில் 2020ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) T20 தொடரில் விளையாட தடையினைப் பெற்றுக் கொண்ட 29 வயது நிரம்பிய அக்மலிற்கு தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் விளக்கம் தர (மார்ச் 17ஆம் திகதி தொடக்கம்) 14 நாட்கள் வரையில் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம், உமர் அக்மலின் சகோதரரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளருமான கம்ரான் அக்மல் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் போது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தனது சகோதரர் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்ததோடு தனது சகோதரர் குற்றங்கள் செய்யக்கூடிய நபர் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஒழுங்கீனமாக நடந்துகொண்ட உமர் அக்மலுக்கு போட்டித் தடை ஏற்பட வாய்ப்பு
உடற்தகுதி பரிசோதனையில்…..
”எனக்கு எனது சகோதரரினைத் தெரியும். அவர் இப்படியான விடயங்களில் (சூதாட்ட விடயங்களில்) ஈடுபட்டிருக்க மாட்டார். அவர் பத்து வருடங்களுக்கு முன்னர் எப்படி சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தாரோ அப்போது இருந்தது போன்றே இப்போதும் தூய்மையாக இருக்கின்றார்.”
சூதாட்டப் புகார் விடயங்கள் ஒருபுறமிருக்க உமர் அக்மல், கடந்த மாதம் உடற்தகுதி தொடர்பான சம்பவம் ஒன்றில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டிருந்ததாக கூறப்பட்டு பின்னர் குற்றவாளி இல்லை என நிரூபணமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<