நெதர்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்துக்கு முதல் வெற்றி

UEFA EURO 2020

278

ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற யூரோ 2020 கால்பந்து தொடரின் போட்டிகளில் நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தமது முதல் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டன. 

நெதர்லாந்து எதிர் உக்ரேன் 

நெதர்லாந்தின் அம்ஸ்டேடாம் அரங்கில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் முதல் பாதியில் எந்தவொரு கோலும் பெறப்படவில்லை. 

எனினும், 50ஆவது நிமிடத்தின் பின்னர் இந்தப் போட்டி ஒரு போராட்டமாக மாற்றம் பெற்றது. முதல் இரண்டு கோல்களையும் 6 நிமிட இடைவெளியில் நெதர்லாந்து அணி பெற்றுக்கொண்டது.

இலகு வெற்றியுடன் யூரோ 2020ஐ ஆரம்பித்த இத்தாலி

எனினும், 75 நிமிடங்களின் பின்னர் வெறும் 4 நிமிடங்களில் உக்ரேன் அணி தமக்கான இரண்டு கோல்களையும் பெற்றது. எனவே, இறுதி 10 நிமிடங்களில் இரண்டு அணிகளும் வெற்றி கோலுக்காக கடுமையாகப் போராடியது. இதன் நிறைவில் 85ஆவது நிமிடத்தில் Denzel Dumfries நெதர்லாந்து அணிக்கான வெற்றி கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

முழு நேரம்: நெதர்லாந்து 3 – 2 உக்ரேன்

கோல் பெற்றவர்கள்   

  • நெதர்லாந்து – Georginio Wijnaldum 52’, Wout Weghorst 58’, Denzel Dumfries 85’ 
  • உக்ரேன் – Andriy Yarmolenko 75’, Roman Yaremchuk 79’

ஆஸ்திரியா எதிர் வடக்கு மசிடோனியா (குழு C)

ரோமானிய தேசிய அரங்கில் இடம்பெற்ற இந்த மோதலின் 18ஆவது நிமிடத்தில் ஸ்டெபன் லைனர் ஆஸ்திரிய அணிக்கான முதல் கோலை ஹெடர் முறையில் பெற்றுக் கொடுத்தார். 

அந்த கோல் பெறப்பட்டு 10 நிமிடங்களில் வடக்கு மசிடோனிய அணித் தலைவர் கோரான் பண்டே மூலம் அவ்வணி முதல் கோலைப் பெற்றது. எனவே, முதல் பாதி தலா ஒரு கோலுடன் நிறைவுபெற்றது. 

பின்னர், இரண்டாம் பாதியின் இறுதி நேரத்தில் 11 நிமிட இடைவெளியில் Gregoritsch, Marko மூலம் கோல்களைப் பெற்ற ஆஸ்திரிய அணி, போட்டி நிறைவில் இரண்டு மேலதிக கோல்களால் வெற்றியை சுவைத்தது. 

முழு நேரம்: ஆஸ்திரியா 3 – 1 வடக்கு மசிடோனியா

கோல் பெற்றவர்கள்   

  • ஆஸ்திரியா – ஸ்டெபன் லைனர் 18’, Michael Gregoritsch 78’, Marko Arnautović 89’ 
  • வடக்கு மசிடோனியா – கோரான் பண்டே 28’

இங்கிலாந்து எதிர் குரோசியா

பிபா தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்கும் 14ஆவது இடத்தில் உள்ள குரோசிய அணிக்கும் இடையிலான இந்த மோதல் குழு D இற்கான முதல் போட்டியாக இங்கிலாந்தின் வெம்ப்லி அரங்கில் இடம்பெற்றது.  

லுகாகுவின் இரட்டை கோல்களினால் பெல்ஜியம் இலகு வெற்றி

சொந்த மைதானத்தில் இடம்பெறும் போட்டி என்பதனால் இங்கிலாந்து அணிக்கு அதிக சாதகம் இருக்கும் என்று நம்பப்பட்ட இந்தப் போட்டியில், இரண்டு அணி வீரர்களும் சம அளவிலேயே மோதிக்கொண்டனர். எனினும், முதல் பாதியில் எந்தவித கோல்களும் பெறப்படவில்லை.

எனினும், 59ஆவது நிமிடத்தில் மத்திய கள வீரர் பிலிப்ஸ் மத்திய களத்தில் இருந்து வழங்கிய பந்துப் பரிமாற்றத்தினால், பிரீமியர் லீக்கில் மென்செஸ்டர் சிட்டிக்காக விளையாடும் ரஹீம் ஸ்டேலிங் முதல் கோலைப் பெற்று இங்கிலாந்து அணியை முன்னிலைப்படுத்தினார். 

எனினும், இந்தப் போட்டியில் பெறப்பட்ட ஒரே கோலாக இது அமைந்தமையினால், போட்டி நிறைவில் இங்கிலாந்து அணி 1-0 என வெற்றி பெற்று தமக்கான முதல் 3 புள்ளிகளையுமு் பெற்றது. 

முழு நேரம்: இங்கிலாந்து 1 – 0 குரோசியா 

கோல் பெற்றவர்கள்   

  • இங்கிலாந்து – ரஹீம் ஸ்டேலிங் 34’

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<