சம்பியன்ஸ் லீக் குழுநிலை அணிகளின் விபரம்
இம்முறை ஐரோப்பிய (UEFA) சம்பியன்ஸ் லீக் தொடரில் ஆடும் அணிகளை குலுக்கல் முறையில் குழுநிலைப் படுத்தும் நிகழ்வு நேற்று (30) மொனாகோவில் இடம்பெற்றது.
இதன் முடிவுகளுக்கு அமைய, சிரீ A சம்பியனான கிறிஸ்டியானோ ரோனால்டோவின் ஜுவண்டஸ் கழகம் இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடெட்டை எதிர்கொள்ளவுள்ளது. கடந்த ஜூலையில் 100 மில்லியன் யூரோவுக்கு இத்தாலியின் ஜுவண்டஸுக்கு மாறிய ரொனால்டோ, ரியெல் மெட்ரிட்டுக்காக ஒன்பது ஆண்டுகள் ஆடுவதற்கு முன், 2003 தொடக்கம் 2009 வரை யுனைடெட்டில் இருந்தார்.
ஐரோப்பிய விருதுகள் அனைத்தையும் தட்டிச் சென்ற ரியல் மெட்ரிட் வீரர்கள்
லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐரோப்பிய…..
இந்நிலையில் ஜுவண்டஸ் மற்றும் யுனைடெட் இரு அணிகளும் சம்பியன்ஸ் லீக்கின் H குழுவில் இடம்பெற்றிருப்பதோடு வலன்சியா மற்றும் யங்போயிஸ் ஆகியவை அந்த குழுவில் இருக்கும் ஏனைய இரண்டு அணிகளுமாகும்.
பார்சிலோனாவை எதிர்கொள்ளும் மிக சிக்கலான குழுவில் டொட்டன்ஹாம் இடம்பெற்றுள்ளது. நெதர்லாந்தின் எரெனவிசி சம்பியனான PSV என்தோவன் மற்றும் இன்டர் மிலான் அணிகள் B குழுவில் இடம்பெற்றிருக்கும் அடுத்த இரண்டு அணிகளுமாகும்.
கடந்த பருவத்தில் இரண்டாவது இடத்தை பெற்ற லிவர்பூல் அணி, பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் இருக்கும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், செர்பியாவின் ரெட் ஸ்டார் பெல்கிரேட் மற்றும் நபோலி அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
பிரீமியர் லீக் சம்பியனான மன்செஸ்டர் சிட்டி F குழுவில் இடம்பெற்றிருப்பதோடு அந்த குழுவில் ஷக்டர் டொனட்ஸ், லியோன் மற்றும் ஹொப்பன்ஹெய்ம் அணிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளும் சம்பியன்ஸ் லீக்கை வென்ற ரியெல் மெட்ரிட் இம்முறை குழுநிலையில் ரோமா, CSKA மொஸ்கோ மற்றும் விக்டோரியா பிள்சன் அணிகளை எதிர்கொள்கிறது.
குழுநிலை அணிகள்
A குழு – அட்லடிகோ மெட்ரிட், பெருஷியா டோர்ட்முண்ட், மொனாகோ, கிளப் ப்ருஜ்.
B குழு – பார்சிலோனா, டொட்டன்ஹாம், PSV என்தோவன், இன்டர் மிலான்.
C குழு – பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், நபோலி, லிவர்பூல், ரெட் ஸ்டார் பெல்கிரேட்.
D குழு – லுகொமோடிவ் மொஸ்கோ, போர்டோ, ஷெல்க், காலடாசரய்.
E குழு – பயெர்ன் முனிச், பென்பிகா, அஜக்ஸ், AEK அதன்ஸ்
F குழு – மன்செஸ்டர் சிட்டி, ஷக்டர் டொன்ஸ்க், லியோன், ஹொப்பன்ஹெய்ம்.
G குழு – ரியல் மெட்ரிட், ரோமா, CSKA மொஸ்கோ மற்றும் விக்டோரியா பிள்சன்.
H குழு – ஜுவண்டஸ், மன்செஸ்டர் சிட்டி, வலென்சியா, யங் போய்ஸ்
குழுநிலை போட்டிகள் எப்போது?
முதல் நாள் போட்டிகள்: செப்டம்பர் 18-19
இரண்டாம் நாள் போட்டிகள்: ஒக்டோபர் 2-3
மூன்றாம் நாள் போட்டிகள்: ஒக்டோபர் 23-24
நான்காம் நாள் போட்டிகள்: நவம்பர் 6-7
ஐந்தாம் நாள் போட்டிகள்: நவம்பர் 27-28
ஆறாம் நாள் போட்டிகள்: டிசம்பர் 11-12
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<