UEFA சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த பார்சிலோனா மற்றும் லீவர்பூல்

251
UEFA - Barcelona and Liverpool

2018/19 ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான UEFA சம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் பார்சிலோனா மற்றும் லீவர்பூல் அணிகள் வெற்றியை பதிவு செய்தன. லயனல் மெஸ்சி மூலம் றெப்பட்ட ஹெட்ரிக் கோலினாலும் ரொபர்டோ பர்மீனோ மூலம் இறுதித் தருணத்தில் பெறப்பட்ட கோலின் மூலமும் இவ்விரு அணிகளும் தனது முதல் போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்தன.

பார்சிலோனா எதிர் பி.எஸ்.வி (PSV Eindhoven)

2017/18 ஆம் பருவகாலத்திற்கான நெதர்லாந்து நாட்டின் ஏறீட்வீஸீய் (Eredivisie) கால்பந்து சுற்றுப் போட்டியின் கடந்த பருவ காலத்திற்கான சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய பி.எஸ்.வி அணி மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்பருவகாலத்திற்கான UEFA சம்பியன்ஸ் கிண்ண போட்டியின் முதலாவது குழு நிலை போட்டியில் பார்சிலோனா அணி வெற்றியை பதிவு செய்தது,

>> புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றது பார்சிலோனா

B பிரிவில் போட்டியிடும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி பார்சிலோனா அணியின் கேம்ப் நோ அரங்கில் நடைபெற்றது. இப்பருவகாலத்தின் முதல் சம்பியன்ஸ் கிண்ண போட்டியிலே லயனல் மெஸ்சி மூலம் பெறப்பட்ட ஹெட்ரிக் கோலினால் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

போட்டி ஆரம்பித்து 10 நிமிடங்களின் பின் முதல் வாய்ப்பை பெற்ற PSV அணியின் மத்தியகள வீரர் ஸ்டிவன் பேர்க்விஐன், பந்தை வலது பக்க மூலையால் உட்செலுத்த முயற்சித்தார். எனினும் கோல் நிலையில் மாற்றம் ஏற்படுத்த முடியவில்லை.

தொடராக பல வாய்ப்புக்களை பெற்ற பார்சிலோனா அணிக்கு போட்டியின் 32 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு அருகில் கிடைக்கப் பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பின் மூலம் முதல் கோலை லயனல் மெஸ்சி பெற்றுக் கொடுத்தார்.

முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்தாடிய பார்சிலோனா அணி, முதல் பாதியை 1-0 என்ற கோல் வித்தியாசதத்தில் வெற்றியுடன் நிறைவு செய்தது

முதல் பாதி: பார்சிலோனா 1 – 0 PSV

இரண்டாம் பாதியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணி மேலதிகமாக மேலும் 3 கோல்களை பெற்றது. முன்கள வீரர் ஓஸ்மானே டேம்பளே மூலம் 74 ஆவது நிமிடத்திலும், லயனல் மெஸ்சி மூலம் 77 மற்றும் 87 ஆவது நிமிடங்களிலும் இரு கோல்களும் பெறப்பட்டன.

பார்சிலோனாவின் அனுபவமிக்க வீரர்களை தாண்டி தனக்கு கிடைக்கப் பெற்ற வாய்ப்புக்களை PSV அணி வீரர்களால் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியாவிட்டாலும், எதிரணிக்கு சவாலான ஓரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

லயனல் மெஸ்சியின் ஹெட்ரிக் வாய்ப்பின் மூலம் போட்டியில் பார்சிலோனா அணி வெற்றியை உறுதி செய்தது.

முழு நேரம்: பார்சிலோனா 4 – 0 PSV


லீவர்பூல் எதிர் PSG

C பிரிவில் போட்டியிடும் லீவர்பூல் மற்றும் PSG (Paris Saint-Germain) அணிகளுக்கு இடையே அன்பீய்ல்ட் அரங்கில்  நடைபெற்ற இப்போட்டியில், உபாதை காரணமாக லீவர்பூல் அணியின் முன்கள வீரர் ரொபர்டோ பர்மீனோ முதல் 11 வீரர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. எனினும் மாற்று வீரராக களமிறங்கிய ரொபர்டோ பர்மீனோவினால் இரண்டாம் பாதியின் இறுதித் தருவாயில் பெறப்பட்ட கோலினால் லிவுர்பூல் அணி 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

>> லிவர்பூல், செல்சி அணிகளுக்கு தொடர்ந்து ஐந்தாவது வெற்றி

தமது சொந்த அரங்கில் நடைபெற்ற  இப்போட்டியில் ஆரம்ப நிமிடத்திலேயே ஆதிக்கம் செலுத்திய லீவர்பூல் அணியினருக்கு போட்டியின் முதல் 10 நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற இரு வாய்ப்புக்களையும் PSG அணியின் கோல் காப்பாளர் அல்பொன்ஸே அரீஓலா சிறந்த முறையில் தடுத்தார்.

போட்டியின் முதல் வாய்ப்பை PSG அணியின் முன்கள வீரர் நெய்மார் 16 ஆவது நிமிடத்தில் பெற்றார். எனினும் அவரால் கோல் நிலையில் அவ்வாய்ப்பினை பயன்படுத்தி எவ்வித மாற்றமும் ஏற்படுத்த முடியவில்லை.

தொடர்ச்சியாக பல வாய்ப்புக்களை பெற்ற லீவர்பூல் அணிக்கு போட்டியின் 30 ஆவது நிமிடத்தில் அன்ட்ரூ ரொபர்ட்சன் உள்ளனுப்பிய பந்தின் மூலம் முன்கள வீரர் டேனியல் ஸ்ட்ரூடிய்ஜ் முதல் கோலைப் பெற்றார்.

தொடராக லீவர்பூல் அணிக்கு 36 ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பை பெற்ற ஜேம்ஸ் மில்னர், முதல் பாதியின் இறுதி தருணத்தில் இரண்டாவது கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

லீவர்பூல் அணி இரு கோல்களால் போட்டியில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், PSG அணியின் பின்கள வீரர் தோமஸ் முயீனீயர் முதல் பாதியின் இறதித் தருவாயில் பெற்ற கோலின் மூலம் முதல் பாதியை 1-2 என்ற கோல் வித்தியாசத்தில் நிறைவு செய்தது.

முதல் பாதி நிறைவு: லீவர்பூல் 2 – 1 PSG

இரண்டாம் பாதி ஆரம்பித்து 13 நிமிடங்களின் பின்னர் லீவரபூல் அணிக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்பின் மூலம் முன்கள வீரர் ஸலாஹ் தனது அணிக்கான 3 ஆவது கோலை பெற்றார்.

எனினும் அம்முயற்சியின் போது எதிரணியின் கோல் காப்பாளர் மீது விடுக்கப்பட்ட முறையற்ற சவால் காரணமாக நடுவரினால் எவ்வித கோலும் வழங்கப்படவில்லை.

இரண்டாம் பாதியின் இறுதித் தருவாய் வரை பல வாய்ப்புக்கள் இரு அணியினதும் பின்கள வீரர்களால் சிறப்பாக தடுக்கப்பட்டன.

எனினும் போட்டியின் 83 ஆவது நிமிடத்தில் லீவரபூல் அணியின் மத்திய களத்தில் விடப்பட்ட தவறை பயன்படுத்திய PSG அணியின் முன்கள வீரர் கெய்லியன் எம்பாப்பே போட்டி யை சமநிலைப்படுத்தினார்.

>> ThePapare.com: பிரீமியர் லீக் வாரத்தின் சிறந்த வீரர் யார்?

போட்டியை வெற்றி பெறும் நோக்கோடு அதிரடியாக ஆடிய லீவர்பூல் அணிக்கு உபாதை காரணமாக மாற்று வீரராக களமிறங்கிய ரொபர்டோ பர்மீனோ மூலம் போட்டி நிறைவு பெற 1 நிமிடம் காணப்படும் தருவாயில் 3 ஆவது கோல் பெறப்பட்டது. மேலதிகமாக பெற்ற 1 கோலின் மூலம் லீவர்பூல் அணி போட்டியில் வெற்றியீட்டியது.

முழு நேரம்: லீவர்பூல் 3 – 2 PSG

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<