23 வயதின்கீழ் வீரர்களுக்கான மாகாண கிண்ணத்தை வென்ற யாழ் பாடசாலை வீரர்கள்

768

இளம் விரர்களுக்கான (23 வயதிற்குட்பட்டோரிற்கான)  மாவட்டங்களுக்கிடையிலான மாகாண ரீதியிலான கிரிக்கெட் தொடரின், வட மாகாணத்திற்கான போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் வவுனியா அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி யாழ் பாடசாலைகள் வீரர்கள் (யாழ்ப்பாணம் A அணி) சம்பியன் கிண்ணத்தினை தமதாக்கியிருந்தனர்.   

ஜெப்னா சுப்பர் லீக்கை வெற்றியுடன் ஆரம்பித்த கொக்குவில் ஸ்டார்ஸ், வேலணை வேங்கைகள்

இன்று (12) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் முதலாவது …

23 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான இந்த மாகாண ரீதியிலான போட்டியில், யாழ் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி இரு அணிகளும், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களினை பிரதிநிதித்துவப்படுத்தி தலா ஒரு அணியும் என தொடரில் மொத்தமாக 6 அணிகள் பங்கெடுத்திருந்தன.

இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு இடம்பெற்ற முதலாவது சுற்றின் நிறைவில், ஒரு குழுவிலிருந்து பாடசாலை வீரர்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் A அணி முதலாவது இடத்தையும், வவுனியா அணி இரண்டாவது அணியாகவும் மற்றைய குழுவிலிருந்து கிளிநொச்சி அணி முதலாவது அணியாகவும், கழக வீரர்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் B அணி இரண்டாவது அணியாகவும் அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்தன.  

அரையிறுதிப் போட்டியில், யாழ் மத்திய கல்லூரியின் முன்னாள் அணித்தலைவர் அலன்ராஜ் தலைமையிலான யாழ்ப்பாணம் A அணியினை 88 ஓட்டங்களால் வீழ்த்திய கொக்குவில் இந்துக் கல்லூரி வீரர் பாணுஜன் தலைமையிலான  யாழ்ப்பாணம் B அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.

மறுபக்கம் குழுவில் முதலிடம் பிடித்திருந்த கிளிநொச்சி அணியினை வெற்றிகொண்ட வவுனியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.

நிபுன் – சமிந்துவின் சிறப்பாட்டத்தால் ஆஸி இளையோரை வீழ்த்திய இலங்கை இளையோர்

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான ….

வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றிருந்த இறுதிப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தனர்.

50 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களம்புகுந்த வவுனியா அணியின் திவாகர், வேகப்பந்துவீச்சாளர் மதுசன் இல்லாத நிலையில் முதலாவது ஓவரினை வீசவந்த மற்றொரு மத்திய கல்லூரி வீரரான இயலரசனின்  முதல் மூன்று பந்துகளிலும் 6 ஓட்டங்களினை விளாசினார். திவாகர் அதே ஓவரின் 5ஆவது பந்தில்  ஜெயதர்சனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, முதலாவது விக்கெட்டினை இழந்தது வவுனியா அணி.  

சென். ஜோன்ஸ் கல்லூரியின் அணித்தலைவர் அபினாஷ், உப தலைவர் சௌமியன் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டினை சாய்க்க 28 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர் வவுனியா வீரர்கள்.

தொடரில் இரண்டாம் இடம் பெற்ற வவுனியா மாவட்ட 23 வயதிற்குட்பட்டோர் அணி

தொடர்ந்து பந்தினை கையிலெடுத்த மத்தியின் சுழற்பந்து வீச்சாளர்கள் தம்மிடையே 7 விக்கெட்டுக்களினை பகிர 94 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களினையும் இழந்தது வவுனியா இளையோர் அணி. வலது கை ஓவ் ஸ்பின் பந்துவீச்சாளர் நிதுசன், இடது கை லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் விதுசன் ஆகியோர் முறையே 9, 24 ஓட்டங்களிற்கு தலா 3 விக்கெட்டுக்களையும், இலங்கை இளையோர் தேசிய அணி வீரர் வியாஸ்காந்த் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.  

பின்னர் 95 என்ற இலகுவான இலக்கினை நோக்கி களமிறங்கிய யாழ் தரப்பின் முதலாவது விக்கெட்டாக சௌமியனும், அடுத்ததாக அதிரடியாக 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து மற்றொரு மத்திய கல்லூரி வீரரான ஜெயதர்சனும் ஆட்டமிழந்தனர்.

2 விக்கெட்டுக்களை இழந்து 38 ஓட்டங்களை பெற்றிருந்த யாழ்ப்பாணம் வீரர்கள், அணித்தலைவர் பாணுஜன் பெற்றுக்கொடுத்த 31 ஓட்டங்களுடன் வெற்றியிலக்கை நெருங்கினர். இயலரசனிடமிருந்தும் 16 ஓட்டங்கள் கிடைக்கப்பெற 15 ஓவர்களில் வெற்றியிலக்கினை அடைந்தனர் யாழ் வீரர்கள்.  

பருவகாலத்தில் இரண்டாவது சதத்தினை பதிவு செய்த டினோசன்

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் பண்டாரவளை புனித..

வடக்கின் பாடசாலைகளில் சோபித்து தற்போது உள்ளூர் கழகங்களிற்கு விளையாடிவரும் வீரர்களை உள்ளடக்கிய அணிகளை இலகுவாக வீழ்த்தி, யாழ் பாடசாலை வீரர்கள் வளர்ந்துவரும் வீரர்களிற்கான வட மாகாண கிண்ணத்தினை தமதாக்கியுள்ளனர். இது இலங்கையில் பாடசாலை மட்டத்திலான கிரிக்கெட்டிற்கும் கழக மட்டத்திலான கிரிக்கெட்டிற்குமான இடைவெளியை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த உதாரணமாகும்.  

  • சம்பியன் அணிக்கான கிண்ணம் வழங்கப்படும்போது

வட பிராந்திய பாடசாலைகள் தேசிய ரீதியில் பலத்த தாக்கத்தினை அண்மைக்காலங்களில் ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், குறித்த பகுதியில் கழகமட்ட கிரிக்கெட்டில் பாரியளவு முன்னேற்றத்தினை அவதானிக்க முடியவில்லை.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கரிசனை கொண்டு எதிர்கால திட்டங்களினை வழிவகுக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

வவுனியா மாவட்ட 23 வயதிற்குட்பட்டோர் அணி  94 ( 27.5) – சாருஜன் 29, துவிகரன் 18, நிதுசன்  3/9, விதுசன் 3/24, வியாஸ்காந்த்  1/11

யாழ் பாடசாலைள் அணி 95/3 (15) – பாணுஜன் 31, ஜெயதர்சன் 19, இயலரசன்   16*

போட்டி முடிவு – 7 விக்கெட்டுக்களால் யாழ். பாடசாலைகள் அணி வெற்றி

விருதுகள்

ஆட்டநாயகன் – விதுசன் (யாழ் பாடசாலைள் அணி)

சிறந்த துடுப்பாட்ட வீரர் – பாணுஜன் (யாழ் பாடசாலைள் அணி)

சிறந்த பந்துவீச்சாளர் – நிதுசன் (யாழ் பாடசாலைள் அணி)

பட உதவி – வடிவானந்தன் தேசிகன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<