இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 19 வயதுக்கு உட்பட்ட சுப்பர் ப்ரொவின்ஷியல் கிரிக்கெட் தொடர் இன்று (16) ஆரம்பமானது. இதன் ஆரம்ப போட்டிகளில் தம்புள்ளைக்கு எதிராக கொழும்பு அணி இலகு வெற்றியீட்டியதோடு காலி அணியை கண்டி அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கொழும்பு எதிர் தம்புள்ளை
ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கமில் மிஷார தலைமையிலான கொழும்பு அணி துடுப்பாட்டம், பந்துவீச்சி என சகல துறைகளிலும் சோபித்த நிலையில் தம்புள்ளை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொழும்பு அணிக்கு மத்திய வரிசையில் கொழும்பு, றோயல் கல்லூரியின் அஷான் விக்கிரமசிங்க சிறப்பாக ஆடி 73 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றார்.
முதல் வரிசையில் வந்த ஜொஹான் டி சில்வா அரைச் சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டதோடு முதல் வரிசையில் வந்த கொழும்பு, ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் ஷமாஸ் 59 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய தம்புள்ளை அணி ஓட்டம் பெறும் முன்னரே முதல் இரண்டு விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தடுமாறியதோடு தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 36.3 ஓவர்களில் 136 ஒட்டங்களுக்கே சுருண்டது. மத்திய வரிசையில் ரவிந்து ரசன்த பெற்ற 34 ஓட்டங்களுமே அதிகமாகும்.
இந்தப் போட்டியில் தம்புள்ளை அணிக்காக யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த் விளையாடியபோதும் அவர் 4 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் இன்றி 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததோடு துடுப்பாட்டத்தில் ஒட்டமின்றி ஆட்டமிழந்தார்.
கொழும்பு அணிக்காக அபாரமாக பந்துவீசிய பிரவீன் நிமேஷ் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
Photos: Colombo vs Dambulla | SLC U19 Super Provincial Tournament 2019
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Johanne De Zilva | run out (Ashian Daniel) | 49 | 64 | 8 | 1 | 76.56 |
Kamil Mishara | c Ravindu Rasantha b Yasiru Rodrigo | 8 | 23 | 1 | 0 | 34.78 |
Mohammed Shamaz | c & b Sudeera Weerarathana | 40 | 59 | 4 | 0 | 67.80 |
Sonal Dinusha | c Muditha Premadasa b Yasiru Rodrigo | 1 | 18 | 0 | 0 | 5.56 |
Ahan Wicrkamasinghe | not out | 78 | 73 | 8 | 0 | 106.85 |
Thashika Nirmal | c Muditha Premadasa b Lakshan Gamage | 28 | 34 | 3 | 0 | 82.35 |
Sandaruwan Chinthaka | c Ashian Daniel b Sudeera Weerarathana | 27 | 17 | 1 | 2 | 158.82 |
Chamindu Wijesinghe | c Dineth Jayakody b Ashian Daniel | 28 | 11 | 3 | 2 | 254.55 |
Avishka Lakshan | c Nipun Dananjaya b Lakshan Gamage | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 23 (b 5 , lb 5 , nb 1, w 12, pen 0) |
Total | 283/8 (50 Overs, RR: 5.66) |
Fall of Wickets | 1-16 (5.6) Kamil Mishara, 2-100 (20.1) Johanne De Zilva, 3-104 (23.5) Sonal Dinusha, 4-124 (28.5) Mohammed Shamaz, 5-184 (39.6) Thashika Nirmal, 6-238 (46.6) Sandaruwan Chinthaka, 7-271 (48.6) Chamindu Wijesinghe, 8-283 (49.6) Avishka Lakshan, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Naveen Fernando | 8 | 0 | 58 | 0 | 7.25 | |
Yasiru Rodrigo | 10 | 2 | 39 | 2 | 3.90 | |
Lakshan Gamage | 8 | 0 | 56 | 2 | 7.00 | |
Sudeera Weerarathana | 10 | 1 | 47 | 2 | 4.70 | |
Ashian Daniel | 10 | 0 | 51 | 1 | 5.10 | |
Vijayakanth Viyaskanth | 4 | 0 | 22 | 0 | 5.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Leshan Amarasinghe | lbw b Praveen de Silva | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Muditha Premadasa | c Sonal Dinusha b Chamindu Wijesinghe | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Ravindu Rasantha | c Mohammed Shamaz b Avishka Lakshan | 34 | 38 | 5 | 0 | 89.47 |
Nipun Dananjaya | c Kamil Mishara b Praveen de Silva | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Dineth Jayakody | c Thashika Nirmal b Johanne De Zilva | 21 | 28 | 4 | 0 | 75.00 |
Lakshan Gamage | b Dilmin Rathnayake | 18 | 30 | 1 | 0 | 60.00 |
Sudeera Weerarathana | b Praveen de Silva | 27 | 55 | 3 | 0 | 49.09 |
Ashian Daniel | c Johanne De Zilva b Dilmin Rathnayake | 7 | 11 | 1 | 0 | 63.64 |
Naveen Fernando | c Kamil Mishara b Sandaruwan Chinthaka | 18 | 35 | 2 | 0 | 51.43 |
Vijayakanth Viyaskanth | lbw b Praveen de Silva | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Yasiru Rodrigo | not out | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 7 (b 0 , lb 2 , nb 0, w 5, pen 0) |
Total | 136/10 (36.3 Overs, RR: 3.73) |
Fall of Wickets | 1-0 (1.5) Muditha Premadasa, 2-0 (2.4) Leshan Amarasinghe, 3-4 (2.6) Nipun Dananjaya, 4-54 (11.5) Dineth Jayakody, 5-73 (16.4) Ravindu Rasantha, 6-90 (20.6) Lakshan Gamage, 7-100 (24.4) Ashian Daniel, 8-136 (34.5) Sudeera Weerarathana, 9-136 (35.4) Naveen Fernando, 10-136 (36.3) Vijayakanth Viyaskanth, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Praveen de Silva | 6.3 | 1 | 20 | 4 | 3.17 | |
Chamindu Wijesinghe | 5 | 2 | 20 | 1 | 4.00 | |
Sonal Dinusha | 4 | 0 | 17 | 0 | 4.25 | |
Johanne De Zilva | 4 | 0 | 22 | 1 | 5.50 | |
Avishka Lakshan | 3 | 0 | 10 | 1 | 3.33 | |
Thashika Nirmal | 6 | 0 | 15 | 0 | 2.50 | |
Dilmin Rathnayake | 6 | 0 | 22 | 2 | 3.67 | |
Sandaruwan Chinthaka | 2 | 1 | 6 | 1 | 3.00 |
கண்டி எதிர் காலி
கவிந்து விக்ரமசிங்கவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் காலியுடனான போட்டியில் கண்டி அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கண்டி அணிக்கு ஆரம்ப வீரராக களமிறங்கிய கண்டி, புனித அந்தோனியார் கல்லூரியின் கவிந்து விக்ரமசிங்க ஒருமுனையில் நின்றுபிடித்து ஆடினார்.
எனினும் மறுமுனை விக்கெட்டுகள் மளமளவென்று பறிபோக கண்டி அணி 78 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் விக்ரமசிங்க ஐந்தாவது விக்கெட்டுக்கு அவிஷ்க தரிந்துவுடன் இணைந்து 109 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார்.
இதன்போது இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணி வீரரான விக்ரமசிங்க 98 பந்துகளுக்கு முகம்கொடுத்து 15 பௌண்டரிகளுடன் 97 ஓட்டங்களை பெற்று சதத்தை தவறவிட்டார். அதேபோன்று தரிந்து 71 பந்துகளில் 74 ஓட்டங்களை பெற்றார்.
இறுதியில் கண்டி அணி 47.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றது. இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட வீரரான சதுன் மெண்டிஸ் காலி அணிக்காக 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.
எட்ட முடியுமான இலக்குடன் பதிலெடுத்தாடிய காலி ஓட்டம் பெறும் முன்னரே முதல் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் மத்திய வரிசையிலும் எந்த வீரரும் சோபிக்கவில்லை. துலித் வெல்லாலகே நிதானமாக 44 ஓட்டங்களை பெற்றபோதும் அது எதிரணிக்கு நெருக்கடியாக அமையவில்லை.
இதனால் காலி அணி 44.5 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. துடுப்பாட்டத்தில் சோபித்த விக்ரமசிங்க பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
Photos: Kandy vs Galle | SLC U19 Super Provincial Tournament 2019
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chamindu Wickramasinghe | c Amshi De Silva b Sandun Mendis | 97 | 98 | 15 | 0 | 98.98 |
Avishka Perera | c Sandun Mendis b Amshi De Silva | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Dunith Jayathunga | c Dunith Wellalage b Jethesh Wasala | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Umayanga Suwaris | c Thaveesha Abhishek b Sandun Mendis | 9 | 30 | 2 | 0 | 30.00 |
Chamod Sandaru | lbw b Dunith Wellalage | 10 | 28 | 2 | 0 | 35.71 |
Avishka Tharindu | c Jethesh Wasala b Sandun Mendis | 74 | 71 | 7 | 1 | 104.23 |
Ravindu Rathnayakke | c Pawan Rathnayake b Sandun Mendis | 6 | 10 | 1 | 0 | 60.00 |
Rohan Sanjaya | c Sandun Mendis b Jethesh Wasala | 22 | 20 | 2 | 1 | 110.00 |
Kavindu Nadeeshan | b Amshi De Silva | 15 | 13 | 0 | 1 | 115.38 |
Ruvin Peiris | b Amshi De Silva | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Subhanu Rajapakse | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 16 (b 1 , lb 3 , nb 0, w 12, pen 0) |
Total | 252/10 (47.1 Overs, RR: 5.34) |
Fall of Wickets | 1-9 (2.4) Avishka Perera, 2-14 (3.1) Dunith Jayathunga, 3-54 (11.6) Umayanga Suwaris, 4-78 (19.3) Chamod Sandaru, 5-187 (36.4) Chamindu Wickramasinghe, 6-212 (40.4) Avishka Tharindu, 7-213 (40.6) Ravindu Rathnayakke, 8-252 (46.1) Kavindu Nadeeshan, 9-252 (46.2) Ruvin Peiris, 10-252 (47.1) Rohan Sanjaya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Amshi De Silva | 7 | 2 | 32 | 3 | 4.57 | |
Jethesh Wasala | 3.1 | 1 | 17 | 2 | 5.48 | |
Sandun Mendis | 10 | 1 | 57 | 4 | 5.70 | |
Ashen Dilhara | 5 | 1 | 24 | 0 | 4.80 | |
Dunith Wellalage | 10 | 1 | 39 | 1 | 3.90 | |
Chethaka Denuwan | 2 | 0 | 13 | 0 | 6.50 | |
Navod Paranavithana | 4 | 0 | 21 | 0 | 5.25 | |
Raveen De Silva | 6 | 0 | 45 | 0 | 7.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Navod Paranavithana | b Chamindu Wickramasinghe | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Thaveesha Abhishek | c Dunith Jayathunga b Ruvin Peiris | 13 | 14 | 1 | 1 | 92.86 |
Chethaka Denuwan | st Avishka Perera b Subhanu Rajapakse | 33 | 43 | 5 | 0 | 76.74 |
Muditha Lakshan | c Chamod Sandaru b Ruvin Peiris | 3 | 7 | 0 | 0 | 42.86 |
Pawan Rathnayake | b Rohan Sanjaya | 21 | 34 | 3 | 0 | 61.76 |
Dunith Wellalage | c Umayanga Suwaris b Subhanu Rajapakse | 44 | 60 | 3 | 0 | 73.33 |
Sandun Mendis | run out (Rohan Sanjaya) | 20 | 19 | 3 | 0 | 105.26 |
Ashen Dilhara | c Avishka Perera b Chamindu Wickramasinghe | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Raveen De Silva | not out | 27 | 47 | 1 | 0 | 57.45 |
Amshi De Silva | c Ruvin Peiris b Rohan Sanjaya | 38 | 38 | 3 | 1 | 100.00 |
Jethesh Wasala | c Avishka Perera b Kavindu Nadeeshan | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Extras | 18 (b 0 , lb 2 , nb 3, w 13, pen 0) |
Total | 219/10 (44.5 Overs, RR: 4.88) |
Fall of Wickets | 1-1 (0.5) Navod Paranavithana, 2-28 (7.2) Thaveesha Abhishek, 3-51 (9.4) Muditha Lakshan, 4-64 (12.5) Chethaka Denuwan, 5-86 (19.5) Pawan Rathnayake, 6-121 (25.5) Sandun Mendis, 7-121 (26.1) Ashen Dilhara, 8-155 (34.1) Dunith Wellalage, 9-214 (43.3) Amshi De Silva, 10-219 (44.5) Jethesh Wasala, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chamindu Wickramasinghe | 7 | 0 | 34 | 2 | 4.86 | |
Ruvin Peiris | 8 | 1 | 39 | 2 | 4.88 | |
Avishka Tharindu | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Subhanu Rajapakse | 10 | 0 | 30 | 2 | 3.00 | |
Rohan Sanjaya | 10 | 1 | 49 | 2 | 4.90 | |
Kavindu Nadeeshan | 6.5 | 0 | 34 | 1 | 5.23 | |
Umayanga Suwaris | 1 | 0 | 10 | 0 | 10.00 |