19 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான தொடரில் காலி அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் தம்புள்ளை அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி ஒன்றை பெற்றது.
ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இன்று (19) நடைபெற்ற போட்டியில் 224 ஓட்ட வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணி 2 விக்கெட்டுகள் கைவசம் இருக்க கடைசி ஓவருக்கு எட்டு ஓட்டங்கள் பெற வேண்டி ஏற்பட்டது.
>>கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்யும் ஐ.சி.சி
இதன் போது காலி அணி கடைசி ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தபோதும் அடுத்த பந்தில் பௌண்டரி ஒன்றை விளாசியது. இந்நிலையில் நான்காவது பந்தில் இரண்டாவது ஓட்டத்தை பெறும் முயற்சியில் காலி தனது கடைசி விக்கெட்டையும் பறிகொடுத்தது.
இதனால் காலி அணி 49.4 ஓவர்களில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தத் தோல்வியுடன் காலி தனது முதல் இரு குழு நிலை போட்டிகளிலும் தோற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடைபெறவிருந்த இந்தப் போட்டி மழை காரணமாகவே இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த தம்புள்ளை அணிக்கு சுபுன் சுமனரத்ன மற்றும் ரவிந்து ரசந்த 2 ஆவது விக்கெட்டுக்காக 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.
Photos: Dambulla Vs Galle | SLC U19 Super Provincial Tournament 2019
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுபுன் சுமனரத்ன 79 பந்துகளில் 56 ஓட்டங்களையும், ரவிந்து ரசந்த 59 பந்துகளில் 53 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும் தொடர்ந்து வந்த வீரர்கள் சோபிக்கத் தவறிய நிலையில் தம்புள்ளை அணி 46.2 ஓவர்களில் 223 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
காலி ரிச்மண்ட் கல்லூரியின் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணி வீரர் சந்துன் மெண்டிஸ் காலி அணி சார்பில் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய காலி அணிக்காக மத்திய வரிசையில் விக்கெட் காப்பாளர் பவன் ரத்னாயக்க அரைச்சதம் ஒன்றை பெற்றபோதும் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு கடைசி ஓவரில் நழுவியது.
குறிப்பாக தம்புள்ளை அணியின் வெற்றிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட அஷியன் டானியல் மற்றும் சுதீர திலகரத்ன தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Leshan Amarasinghe | c Thevin Amarasinghe b Ashen Dilhara | 11 | 9 | 2 | 0 | 122.22 |
Supun Sumanarathna | c & b Navod Paranavithana | 56 | 79 | 6 | 0 | 70.89 |
Ravindu Rasantha | lbw b Sandun Mendis | 53 | 59 | 7 | 0 | 89.83 |
Nipun Dananjaya | c Thaveesha Abhishek b Sandun Mendis | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Sudeera Weerarathana | c Ashen Dilhara b Navod Paranavithana | 17 | 27 | 2 | 0 | 62.96 |
Dineth Jayakody | not out | 29 | 49 | 2 | 0 | 59.18 |
Dilum Sudeera | run out () | 17 | 20 | 1 | 0 | 85.00 |
Lakshan Gamage | c Pawan Rathnayake b Dunith Wellalage | 14 | 15 | 1 | 0 | 93.33 |
Theventhiran Dinoshan | not out | 6 | 8 | 0 | 0 | 75.00 |
Ashian Daniel | b Dunith Wellalage | 6 | 7 | 1 | 0 | 85.71 |
Yasiru Rodrigo | b Kavindu Dilhara | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 14 (b 4 , lb 2 , nb 0, w 8, pen 0) |
Total | 223/9 (46.2 Overs, RR: 4.81) |
Fall of Wickets | 1-15 (2.4) Leshan Amarasinghe, 2-119 (21.3) Ravindu Rasantha, 3-119 (21.6) Nipun Dananjaya, 4-135 (25.3) Supun Sumanarathna, 5-161 (33.5) Sudeera Weerarathana, 6-189 (40.1) Dineth Jayakody, 7-205 (42.3) Dilum Sudeera, 8-214 (43.6) Lakshan Gamage, 9-222 (45.5) Ashian Daniel, 10-223 (46.2) Yasiru Rodrigo, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ashen Dilhara | 8.2 | 0 | 38 | 2 | 4.63 | |
Jethesh Wasala | 4 | 0 | 28 | 0 | 7.00 | |
Dunith Wellalage | 10 | 1 | 38 | 2 | 3.80 | |
Navod Paranavithana | 8 | 1 | 29 | 2 | 3.62 | |
Sandun Mendis | 10 | 0 | 55 | 3 | 5.50 | |
Raveen De Silva | 6 | 0 | 29 | 0 | 4.83 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Navod Paranavithana | c & b Nipun Dananjaya | 40 | 83 | 4 | 0 | 48.19 |
Chethaka Denuwan | c Nipun Dananjaya b Ashian Daniel | 11 | 13 | 2 | 0 | 84.62 |
Thaveesha Abhishek | run out () | 5 | 12 | 1 | 0 | 41.67 |
Thevin Amarasinghe | lbw b Dilum Sudeera | 12 | 31 | 0 | 0 | 38.71 |
Pawan Rathnayake | c Yasiru Rodrigo b Ashian Daniel | 54 | 68 | 3 | 1 | 79.41 |
Muditha Lakshan | c Nipun Dananjaya b Dilum Sudeera | 6 | 7 | 1 | 0 | 85.71 |
Dunith Wellalage | c Dilum Sudeera b Supun Sumanarathna | 31 | 50 | 3 | 0 | 62.00 |
Sandun Mendis | c Nipun Dananjaya b Dilum Sudeera | 37 | 28 | 2 | 0 | 132.14 |
Ashen Dilhara | run out () | 7 | 8 | 1 | 0 | 87.50 |
Raveen De Silva | c Yasiru Rodrigo b Ashian Daniel | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Jethesh Wasala | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 0 , lb 0 , nb 4, w 13, pen 0) |
Total | 221/10 (49.4 Overs, RR: 4.45) |
Fall of Wickets | 1-15 (4.5) Chethaka Denuwan, 2-37 (10.1) Thaveesha Abhishek, 3-79 (22.5) Thevin Amarasinghe, 4-79 (23.1) Navod Paranavithana, 5-86 (24.6) Muditha Lakshan, 6-147 (40.3) Dunith Wellalage, 7-210 (47.4) Pawan Rathnayake, 8-212 (48.1) Sandun Mendis, 9-49 (49.1) Raveen De Silva, 10-221 (49.4) Ashen Dilhara, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ashian Daniel | 9.4 | 0 | 50 | 3 | 5.32 | |
Yasiru Rodrigo | 6 | 0 | 30 | 0 | 5.00 | |
Sudeera Weerarathana | 10 | 0 | 27 | 0 | 2.70 | |
Nipun Dananjaya | 10 | 1 | 37 | 1 | 3.70 | |
Dilum Sudeera | 10 | 1 | 53 | 3 | 5.30 | |
Supun Sumanarathna | 4 | 0 | 24 | 1 | 6.00 |