சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகள் இன்று நிறைவடைந்ததோடு மேலும் ஒரு போட்டி ஆரம்பமானது.
டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு எதிர் பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா
கம்பஹாவில் நடைபெற்ற போட்டியில் விஹான் குணசேகர துடுப்பாட்டத்திலும் மெதுஷன் குமார பந்துவீச்சிலும் சோபித்ததால் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி 92 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரி விஹான் குணசேகரவின் அரைச்சதத்தின் மூலம் 172 ஓட்டங்களை பெற்றதோடு, மெதுஷன் குமார 6 விக்கெட்டுகளை வீழ்த்த பண்டாரநாயக்க கல்லூரியை 136 ஓட்டங்களுக்கு சுருட்டியது.
இந்நிலையில் இன்று தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்காக விஹான் குணசேகர சிறப்பாக ஆடி மீண்டும் அரைச்சதம் ஒன்றைப் பெற்றார். இதன் மூலம் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி 184 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பண்டாரநாயக்க கல்லூரிக்காக பந்துவீச்சில் ஜனிது ஜயவர்தன 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
பண்டாரநாயக்க கல்லூரிக்கு நெருக்கடி கொடுத்த டி.எஸ். வீரர் மெதுஷான்
சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1) பாடசாலை அணிகளுக்கு…
இந்நிலையில் 220 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பண்டாரநாயக்க கல்லூரி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த விஹான் குணசேகர பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மெதுஷன் குமார 2 விக்கெட்டுகளை பதம்பார்த்து இந்த போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 172 (50.1) – விஹான் குணசேகர 60, டுவின் நிலக்ஷன 31*, பசிந்து ஆதித்ய 24, ஹசித்த திமல் 4/30, ஜனிது ஜயவர்தன 3/19, சஹிரு ரொஷேன் 2/11
பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (முதல் இன்னிங்ஸ்) – 136 (35.4) – சிசித சதுனோத்ய 63, மெதுஷான் குமார 6/35
டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 184/8d (51) – விஹான் குணசேகர 61, சமத் யட்டவர 45, ஜனிது ஜயவர்தன 5/61
பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 128 (40.5) – சிசித சதுனோத்ய 20, விஹான் குணசேக 3/37, மெதுஷன் குமார 2/42
முடிவு – டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 92 ஓட்டங்களால் வெற்றி
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ எதிர் மஹிந்த கல்லூரி, காலி
சீரற்ற காலநிலையால் பெரும்பாலான நேரம் பாதிக்கப்பட்ட இப்போட்டியில் இரண்டு நாட்களிலும் மொத்தமாக 42.2 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது.
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் இன்று தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 101 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இந்நிலையில் மஹிந்த கல்லூரி 10 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது மழை குறுக்கிட போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்) – 101/8d (32.2) – விஷ்வ பீரிஸ் 42, அவிந்து பெர்னாண்டோ 38, சவிந்து பீரிஸ் 31, கே.எஸ்.டி. எதிரிசிங்க 2/11, கவின்து எதிரிவீர 4/59
மஹிந்த கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 8/2 (10)
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை
கம்பஹா, கதிரான கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதியபோதும் சீரற்ற காலநிலையால் போட்டி சமநிலையில் முடிந்தது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 180 ஓட்டங்களை பெற்றது.
ஆசிய கிண்ணத்துக்கான இலங்கை கனிஷ்ட அணி மலேஷியா பயணம்
மலேஷியாவில் நாளை (09) முதல் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான…
இன்று தமது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த புனித செர்வதியஸ் கல்லூரி முதல் இன்னிங்சுக்காக 175 ஓட்டங்களை பெற்றது. சிறப்பாக பந்து வீசிய லசித் க்ரூஸபுள்ளே 5 விக்கெட்டுகளையும் ரவிந்து பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.
பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி ஆட்டநேர முடிவின்போது 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
மழை காரணமாக முதல் நாளில் 60.4 ஓவர்களும் இரண்டாவது நாளில் 67.4 ஓவர்களும் வீசப்பட்டன.
போட்டியின் சுருக்கம்
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 180 (53.4) – மனிஷ சில்வா 48, அஷான் பெர்னாண்டோ 30, கேசர நுவந்த 4/35, சரித் ஹசந்த 3/27
புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்) – 175 (64.4) – புஷ்பித டில்ஷான் 54, சுபுன் கவிந்த 32, லசித் க்ரூஸபுள்ளே 5/31, ரவிந்து பெர்னாண்டோ 4/55
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 34/2 (10) – கேசர நுவந்த 2/12
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு
காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் முதல் நாளில் ரிச்மண்ட் கல்லூரி சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆதிக்கம் செலுத்தியது. எனினும் சீரற்ற காலநிலை காரணமாக போட்டி குறைந்த ஓவர்களில் முடிவுற்றது.
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ரிச்மண்ட் கல்லூரிக்கு அவிந்து தீக்ஷன 64 ஓட்டங்களை பெற்றார். முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது ரிச்மண்ட் கல்லூரி தனது முதல் இன்னிங்சுக்காக 6 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 225/6 (64.5) – அவிந்து தீக்ஷன 64, ஆதித்ய சிறிவர்தன 44, திலும் சுதீர 29*, தவீஷ அபிஷேக் 22, நிபுன் லக்ஷான் 2/37, சவன் பிரபாஷ் 2/25