சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதின் கீழான பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 1 கிரிக்கெட் தொடரின் மேலும் 6 போட்டிகள் இன்று நடைபெற்றன.
நாலந்த கல்லூரி, கொழும்பு எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி
மக்கோன சர்ரே மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரிச்மண்ட் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை நாலந்த கல்லூரிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய நாலந்த கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 35.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நாலந்த கல்லூரி சார்பாக சுரங்க விஜேவர்தன 25 ஓட்டங்களையும் அவிஷ்க பெரேரா 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ரிச்மண்ட் கல்லூரி சார்பாக சதுன் மென்டிஸ் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் திலும் சுதீர 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரிச்மண்ட் கல்லூரி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் சுருக்கம்
நாலந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 83 (35.4) – சுரங்க விஜேவர்தன 25, அவிஷ்க பெரேரா 20, சதுன் மென்டிஸ் 4/18, திலும் சுதீர 4/20
ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 39/1 (9.4)
தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை எதிர் மஹிந்த கல்லூரி, காலி
மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மாசோக கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தர்மாசோக கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் சச்சின் சஞ்சீவ 47 ஓட்டங்களையும் நிமேஷ் மென்டிஸ் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
மஹிந்த கல்லூரி சார்பாக பந்துவீச்சில் கவிந்து எதிரிவீர 57 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மஹிந்த கல்லூரி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை (முதலாவது இன்னிங்ஸ்) – 145 (48.3) – சச்சின் சஞ்சீவ 47, நிமேஷ் மென்டிஸ் 39, கவிந்து எதிரிவீர 6/57
மஹிந்த கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 34/2 (16)
புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை
டி மெசனொட் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது . இதன்படி துடுப்பாடக் களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. புனித தோமியர் கல்லூரி சார்பாக துலிப் குணரத்ன 58 ஓட்டங்களையும் சனில் டி மெல் 39 ஓட்டங்களையும் டிலொன் பீரிஸ் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
லாஹூர் T-20 அணிக்கான பரிந்துரை விளையாட்டு அமைச்சரால் நிராகரிப்பு
லாஹூர் T-20 அணிக்கான பரிந்துரை விளையாட்டு அமைச்சரால் நிராகரிப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கும் T-20 சர்வதேச போட்டிகள் மற்றும் லாஹூரில் நடைபெறவுள்ள ஒரு T-20 …
டி மெசனொட் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் சாலிய ஜூட் 69 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் ரோமல் பெர்னாண்டோ 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டி மெசனொட் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 1 விக்கெட் இழப்பிற்கு 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதலாவது இன்னிங்ஸ்) – 238 (73.2) – துலிப் குணரத்ன 58, சனில் டி மெல் 39, டிலொன் பீரிஸ் 45, க்ரிஷான் முனசிங்ஹ 23, தினேத் கன்னங்கர 23, மனிஷ ரூபசிங்ஹ 21, சாலிய ஜூட் 6/69, ரோமல் பெர்னாண்டோ 2/39
டி மெசனொட் கல்லூரி, கந்தானை (முதலாவது இன்னிங்ஸ்) – 38/1 (11.3)
திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய திரித்துவக் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது தமது முதல் இன்னிங்சுக்காக 3 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அவ்வணி சார்பில் ஹசிந்த ஜயசூரிய ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களைப் பெற்றதோடு புபுது பண்டார 28 ஓட்டங்களைப் பெற்றார்.
போட்டியின் சுருக்கம்
திரித்துவக் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 99/3 (39) – ஹசிந்த ஜயசூரிய 51*, புபுது பண்டார 28
புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி எதிர் கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி
பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ்வூட் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை சில்வெஸ்டர் கல்லூரிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய சில்வெஸ்டர் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 39 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 71 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
சில்வெஸ்டர் கல்லூரி சார்பாக ஜனகாந்த ராஜாசிங்ஹ 22 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் கிங்ஸ்வூட் கல்லூரி சார்பாக ஹஷான் விக்ரமசிங்ஹ 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் சுருக்கம்
புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 71/6 (39) – ஜனகாந்த ராஜாசிங்ஹ 22, ஹஷான் விக்ரமசிங்ஹ 2/08
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் புனித மரியார் கல்லூரி, கேகாலை
குருநாகலை வெலகெதர மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது . இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை சீரற்ற காலநிலை காரணமா முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 2/0 (1.3)