பத்தும் நிசங்க 192*, இசிபதன கல்லூரி ஆதிக்கம்

2962
U19 Schools Cricket Roundup

இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி மற்றும் கொழும்பு 05 இசிபதன கல்லூரி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க 2015/16ஆம் ஆண்டுக்கான 19 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் டிவிஷன் கிரிக்கட் பருவ காலத்தின் தனது முதலாவது போட்டியில் அருமையாக ஆடி ஆட்டம் இழக்காமல் 192 ஓட்டங்களைப் பெற்று அமோகமாக இந்தப் பருவ காலத்தை ஆரம்பித்துள்ளார்.

இன்று கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமான 2016/17 ஆண்டுக்கான 19 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் டிவிஷன் கிரிக்கட் பருவ காலத்தின் இசிபதன கல்லூரி அணியின் முதலாவது போட்டியில் இசிபத்தன கல்லூரி அணி ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இசிபதன கல்லூரி அணியின் தலைவர் செஞ்சுல அபேவிக்ரம முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார். தலைவரின் முடிவு சரி என்பதை வெளிக்காட்டும் வகையில் இசிபதன கல்லூரி அணியின் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி அணியை முதல் இனிங்ஸில் 15 ஓட்டங்களுக்கு சுருட்டியது. இதில் ஹிருன சீகர போராடி 35 ஓட்டங்களைப் பெற்றார்.

கொழும்பு இசிபதன கல்லூரி அணியின் பந்து வீச்சில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மதுசிக சந்தருவன் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்த வேகப்பந்து வீச்சாளர்களான நிரஞ்சன் வன்னியாராச்சி மற்றும் லஹிரு தில்ஷான் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் தமக்கிடையே பங்கு போட்டுக் கொண்டனர்.

பின் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடிவரும் கொழும்பு இசிபதன கல்லூரி அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. இதில் மிக மிக அபாரமாக விளையாடி பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழையைப் பொழிந்து ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி அணி பந்து வீச்சாளர்களைப் பதம் பார்த்த பத்தும் நிசங்க ஆட்டம் இழக்காமல் 168 பந்துகளை சந்தித்து 27 பவுண்டகள்ரி மற்றும் 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 192 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். நாளைய 2ஆம் நாள் ஆட்டத்தில் அவர் இந்த பருவத்தில் 1ஆவது இரட்டை சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 போட்டியின் சுருக்கம் 

ஜனாதிபதி கல்லூரி – 145/10 (41.5 ஓவர்களில்)

ஹிருன சீகர 35, ஷாலக பண்டார 30, முஹமத் ரிபாஸ் 22, மதுசிக சந்தருவன் 4/30, நிரஞ்சன் வன்னியாராச்சி 3/33, லஹிரு தில்ஷன் 2/30.

இசிபத்தன கல்லூரி – 285/5 (51 ஓவர்களில்)

கலன பெரேரா 22, ஹெஷான் பெர்னாண்டோ 25, பத்தும் நிசங்க 192*,  சஞ்சுல பண்டார 10 *, தனுல சமோத் 2/66


ரிச்மண்ட் கல்லூரி எதிர் புனித மேரிஸ் கல்லூரி, கேகாலை

சிங்கர் கிண்ணம்” 19 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் டிவிஷன் கிரிக்கட் பருவ காலத்தின் குழுபிரிவில் இன்று ஆரம்பமான போட்டியில் தென் மாகாணத்தின் முன்னாள் சம்பியன் அணியான காலி ரிச்மண்ட் கல்லூரி அணி மற்றும் கேகாலை புனித மேரிஸ் கல்லூரி அணிகள் மோதுகின்றன. இப்போட்டி காலியில் நடைபெறுகிறது.

போட்டியில் முதலில் ஆடிய கேகாலை புனித மேரிஸ் கல்லூரி அணி வீரர்கள் ரிச்மண்ட் கல்லூரி பந்து வீச்சாளர்களான திலங்க உதீஷ மற்றும் தனஞ்சய லக்ஷன் ஆகியோரின் அற்புதமான பந்து வீச்சுகளுக்கு நின்று பிடிக்க முடியாமல் 22.5 ஓவர்களில் 91 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அஷான் சேனாதிர 31 ஓட்டங்களைப் பெற்றார். ரிச்மண்ட் கல்லூரி அணியின் பந்து வீச்சில் திலங்க உதீஷ 5 விக்கட்டுகளையும் அவரது பந்து வீச்சு ஜோடி தனஞ்சய லக்ஷன் 4 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடி வரும் காலி ரிச்மண்ட் கல்லூரி அணி இன்றைய முதலாம் ஆட்ட நேர முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. இதில் ஹசறு சமிக்கார 60 ஓட்டங்களைப் பெற்றார். மேரிஸ் கல்லூரி அணியின் பந்து வீச்சில் மாஸ் ரஹீம் மற்றும் திமிர குமார ஆகியோர் தலா 3 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

 போட்டியின் சுருக்கம் 

புனித மேரிஸ் கல்லூரி – 91/10 (22.5 ஓவர்களில்)

அஷான் சேனாதிர 31, திலங்க உதீஷ 5/41, தனஞ்சய லக்ஷன் 4/38

ரிச்மண்ட் கல்லூரி – 201/7 (62 ஓவர்களில்)

ஹசறு சமிக்கார 60, ஆதித்ய சிறிவர்த்தன 36, ரவிஷ்க விஜேசிறி 34 *, துவீன் சசிந்து 36 *, மாஸ் ரஹிம் 3/56, திமிர குமார 3/55.

இரண்டு போட்டிகளும் நாளை செப்டம்பர் 14ஆம் திகதி தொடரவுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்