19 வயதின் கீழ் சிங்கர் பாடசாலைகள் கிரிக்கெட் – மூன்றாம் தவணை குறித்த பார்வை

165

புத்தாண்டை எதிர்கொண்டிருக்கும் வேளையில் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் மற்றும் டிசம்பர் விடுமுறைக்கு பின்னர் 2017/18 பருவகால பாடசாலைகளுக்கு இடையிலான விறுவிறுப்பான சிங்கர் கிரிக்கெட் தொடர் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த இடைவிடாத மழை காரணமாக பெரும்பாலான அணிகளுக்கு ஒதுக்கப்பட்ட மூன்றாம் தவணை போட்டிகளில் ஆட முடியாமல் போயின. எனினும் இடம்பெற்ற போட்டிகளில் தனிநபர் மற்றும் சகல துறைகளில் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன.

சாஹலின் அபார சுழலினால் முதல் T20 போட்டியில் இலங்கை அணி படுதோல்வி

இன்று (20) நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான…

நியூசிலாந்தில் 2018 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 19 வயதுக்கு உட்பட்ட ICC உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவிருப்பதால் சில முன்னணி வீரர்களுக்கு தமது பாடசாலைகளுக்காக ஆட முடியாமல் போகும். எவ்வாறாயினும் பிரிவு ஒன்று (division I) தொடரில் இடம்பெறும் மொத்தம் 36 அணிகளும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு அடுத்த சில மாதங்கள் இடம்பெறும் சவாலான பாடசாலை கிரிக்கெட்டில் மோதவுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் என 16 அணிகள் இரண்டு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு தகுதிபெறவுள்ளன. இந்த பாடசாலைகள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிக்கும் தகுதி பெறும். லீக் தொடர் முடிந்த பின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அவதானத்திற்குரிய அணிகள் 

ரிச்மண்ட் கல்லூரி – இரண்டு நாட்கள் தொடரில் கடந்த பருவத்தில் இரண்டாம் இடம் பிடித்த ரிச்மண்ட் கல்லூரி C குழு புள்ளிப் பட்டியலில் தற்போது முன்னணியில் உள்ளது. அந்த அணி தனது பாரம்பரிய போட்டிகள் உட்பட மூன்றாம் தவணையில் ஆறு போட்டிகளில் ஆடி மூன்றில் வெற்றி பெற்றது. பன்னிபிட்டிய தர்மபால கல்லூரி, அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரி மற்றும் மாத்தறை புனித செர்வதியஸ் கல்லூரி அணிகளையே அது வீழ்த்தியது.

காலியை சேர்ந்த அணிக்கு இரு மெண்டிஸ் சகோதரர்களான கமின்து மற்றும் சந்துன் அபார திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணித் தலைவரான கமின்து 3 சதங்கள் உட்பட 400க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுள்ளார். தேசிய அணிக்கு ஆடுவதால் அவரால் ஜனவரி மாதத்தில் பாடசலைக்கு ஆட முடியாதுள்ளது. எனினும் 35க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் அவரது இளைய சகோதரரான சந்துன் தொடர்ந்து தனது திறமையை வெளிக்காட்ட எதிர்பார்த்துள்ளார்.

புனித தோமியர் கல்லூரி – டெல்லோன் பீரிஸ் தலைமையிலான புனித தோமியர் கல்லூரி அணி தனது மூன்றாம் தவணையில் 7 போட்டிகளில் ஆடி மலியதேவ கல்லூரி, ஸாஹிரா கல்லூரி, பன்னிபிட்டிய தர்மபால கல்லூரி மற்றும் மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகளுக்கு எதிராக வெற்றிகளைப் பெற்றது.

இலங்கை அணியின் எதிர்காலதிற்கான ஹத்துருசிங்கவின் திட்டம்

இலங்கை அணிக்கு மீண்டும் சேவையாற்ற கிடைத்தமையை எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகவும், மிகப் பெரிய சந்தர்ப்பமாகவும்…

அணித் தலைவர் பீரிஸ் இந்த பருவத்தில் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரராக இடம்பிடித்ததோடு இதுவரை 50 விக்கெட்டுகளை வீழ்த்த நெருங்கியுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலன பெரேரா தோமியர் கல்லூரிக்காக அதிரடியாக பந்து வீசி வருகிறார். எனினும் மெலிந்த உயரமான அந்த பந்துவீச்சாளர் தேசிய அணிக்காக ஆடவிருப்பதால் ஜனவரி மாதத்தில் கல்லூரி போட்டிகளை கலன இழக்கிறார்.

புனித ஜோசப் கல்லூரி – டார்லி வீதியின் இந்த வீரர்கள் தவணையில் 6 போட்டிகளில் ஆடி பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டனர். இதில் தமது பாரம்பரிய போட்டிகளிலும் அவர்கள் அபாரமாக ஆடினர். அந்த அணி யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி, கந்தானை டி மசனோட் கல்லூரி, ஸாஹிரா கல்லூரி மற்றும் மலியதேவ கல்லூரி அணிகளை வென்றது.

தொடரில் C குழுவில் இடம்பெற்றிருக்கும் புனித ஜோசப் கல்லூரி, ஆனந்த கல்லூரி மற்றும் புனித தோமியர் கல்லூரிகளுக்கு எதிரான சவாலான போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி வீரர் ரெவான் கெல்லி மூன்றாவது தவணையில் இரண்டு சதங்கள் உட்பட 600 ஓட்டங்கள் வரை விளாசி இருப்பதோடு அந்த அணியின் 14 வயதுடைய சுழற்பந்து வீச்சாளர் துமித் வெல்லகே மற்றும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அஷைன் டனியல் 80 விக்கெட்டுகளை நெருங்கியுள்ளனர்.

புனித ஆலோசியஸ் கல்லூரி – பாடசாலை கிரிக்கெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படாத கறுப்பு குதிரைகளான காலி புனித ஆலோசியஸ் கல்லூரி 5 தொடர் போட்டிகள் உட்பட 8 போட்டிகளில் ஆடியதோடு அதில் இரண்டு ஆட்டங்கள் மழையால் ரத்தாயின. அந்த அணி இசிபதன கல்லூரி, ஸாஹிரா கல்லூரி, கோட்டை ஜனாதிபதி கல்லூரி மற்றும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரிகளை வீழ்த்தியது.

அலோசியஸ் கல்லூரி B குழுவில் ஆடுவதோடு அந்த குழுவின் ஏனைய அணிகள் இன்னும் போதிய போட்டிகளில் ஆடாத நிலையில் 2018 ஆம் ஆண்டு இந்த குழுவில் விறுவிறுப்பான ஆட்டங்களை எதிர்பார்க்கலாம். எனினும் அந்த அணியில் இரு வீரர்கள் தேசிய அணிக்கு ஆடுவதற்கு விடைபெற்றுள்ளனர். அவர்களில் ஒருவரான ஹரீன் புத்தில 55 விக்கெட்டுகளை பதம்பார்த்து தற்போது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உள்ளார். மற்றையவரான ரவின்து சன்ஜன 500 ஓட்டங்களை நெருங்கியுள்ளார்.

சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடருக்கான முதல் அழைப்பு இந்தியாவிடம் கையளிப்பு

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபையினால்…

தர்ஸ்டன் கல்லூரி – வேகப்பந்து வீச்சாளர் நிபுன் லக்ஷான் தலைமையிலான தர்ஸ்டன் கல்லூரி A குழுவில் முன்னணியில் உள்ளது. சில மரபு போட்டிகளுடன் அந்த அணி ஐந்து போட்டிகளில் ஆடியது. இதில் மாத்தறை புனித தோமியர் கல்லூரி மற்றும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தர்ஸ்டன் கல்லூரி சிறப்பான வெற்றியை பெற்றது.

பலம் கொண்ட அணிகளாக கருதப்படும் அனந்த கல்லூரி, திரித்துவ கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி போன்ற அணிகள் இன்னும் தமது திறமையை வெளிக்காட்டவில்லை. எனினும் இந்த தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்த அணிகள் சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு சவால் கொடுக்கும் என்று நம்பலாம்.

மோசமாக ஆடியோர்

மருதானை ஸாஹிரா கல்லூரி நான்கு, ஐந்து தடவைகள் தமது அனுபவம் கொண்ட அணியுடன் களமிறங்கியபோதும் மோசமாக ஆடி சொந்த மைதானம் மற்றும் வெளி மைதானங்களில் தோல்விகளையே சந்தித்தது. அந்த அணி முதல் பிரிவில் தமது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் முதலாம் தவணையில் அவர்கள் தமது திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஹசித் திமால் தலைமையிலான கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி இந்த பருவத்தில் குறைந்தது ஐந்து போட்டிகளில் மோசமாக தோற்றுள்ளது. தம்மை பிரிவு ஒன்றில் தக்கவைத்துக் கொள்ள அந்த அணி முதலாம் தவணையில் சிறப்பான திறமையை வெளிக்காட்டுவது கட்டாயமாகும்.

ஒட்டுமொத்த புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டு நாள் தொடர் முடிவில் தரமிறக்கப்படும். பாணந்துறை புனித ஜோசப் கல்லூரி, மாத்தறை புனித தோமியர் கல்லூரி, கண்டி தர்மராஜா கல்லூரி, குருநாகல் மலியதேவ கல்லூரி போன்ற அணிகள் 2017/18 பருவத்தில் மறக்க முடியாத ஆரம்பத்தை பெற்றபோதும் புத்தாண்டில் தங்களது அதிஷ்டத்தில் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளன.